மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கொம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நந்திகுமார். இவரது 2வது மகன் சதீஷ்குமார் (28). கம்பி கட்டும் தொழிலாளி. அதே கிராமத்தை சேர்ந்த அழகுமலை என்பவரின் மகள் மகாலட்சுமி(23) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தம்பி, தனது அக்காவையும் அவரது காதலனையும் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கொம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நந்திகுமார். இவரது 2வது மகன் சதீஷ்குமார் (28). கம்பி கட்டும் தொழிலாளி. அதே கிராமத்தை சேர்ந்த அழகுமலை என்பவரின் மகள் மகாலட்சுமி(23) என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மகாலட்சுமியின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க;- பெண் குளிப்பதை ரகசிய கேமரா மூலம் அங்குலம் அங்குலமாக ரசித்த ஹவுஸ் ஓனர்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் மகாலட்சுமிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால், திருமணமான ஒரே வாரத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது தாய் வீட்டிற்கே மகாலட்சுமி வந்துவிட்டார். இதனையடுத்து மகாலட்சுமி தனது முன்னாள் காதலனான சதீஷ்குமாருடன் செல்போனில் பேச தொடங்கினார்.
இதனை அறிந்த மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார் தனது அக்காவை கண்டித்துள்ளார். மேலும் அவரது காதலன் சதீஷ்குமாரையும் எச்சரித்துள்ளார். ஆனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பழகி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார் இருவரையும் கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று இரவு சதீஷ்குமார் வேலை முடிந்து கொம்பாடியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க;- என் புருஷனுக்கு 500 பெண்களுடன் தொடர்பு.. செல்போனில் கொட்டி கிடந்த அந்தரங்க படங்கள்.. மனைவி பகீர்..!
அப்போது, அவரை வழிமறித்த பிரவீன்குமார், கண்களில் மிளகாய் பொடியைத் தூவி அரிவாளால் அவரது தலையை துண்டித்துள்ளார். துண்டித்த தலையை அந்தப் பகுதியில் உள்ள நாடக மேடையில் வைத்துவிட்டு, நேராக தனது வீட்டுக்குச் சென்ற பிரவீன் குமார் வீட்டில் இருந்த சகோதரி மகாலட்சுமியையும் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதை தடுக்க வந்த தாயின் கை துண்டானது. இதனையடுத்து பிரவீன்குமார் அங்கிருந்து தப்பித்து தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.