300 அடி பள்ளத்தில் தலைகீழாக தொங்கும் லாரி..!! அதில் இருந்தவர்கள் நிலை என்ன ஆனது தெரியுமா..??

Published : Dec 23, 2019, 04:22 PM IST
300 அடி பள்ளத்தில் தலைகீழாக தொங்கும் லாரி..!!  அதில் இருந்தவர்கள் நிலை என்ன ஆனது தெரியுமா..??

சுருக்கம்

ஆனால் லாரி பள்ளத்தில் கவிழ்வதற்குமுன்  சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர் லாரியின் முன் சக்கரம் பாதி பள்ளத்தில் தொங்கியபடி லாரியை கட்டுப்படுத்தி நிறுத்தியுள்ளார். 

300 அடி பள்ளத்தில் லாரி தலைகீழாக தொங்கியபடி நிற்கும் சம்பவம் மிகுந்த கேரளாவில்  மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து பருப்பு ஏற்றிக்கொண்டு தமிழகம் நோக்கி லாரி  ஒன்று வந்து  கொண்டிருந்தது .   இந்நிலையில் நேற்று காலை அந்த லாரி தமிழக எல்லையான குமுளி மலைப்பகுதியில் உள்ள எஸ் வளைவில்  வந்து கொண்டிருக்கும்போது  லாரி  திடீரென அதன் கட்டுப்பாட்டை இழந்தது. 

எதிரில் 300 அடி பள்ளம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் லாரியை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்  ஆனால் தறிகெட்டு ஓடிய லாரி அங்கிருந்த தடுப்புச் சுவரில் மோதி  இடித்து தள்ளி 300 அடி பள்ளத்தில் கவிழும்பாடி சென்றுள்ளது .  ஆனால் லாரி பள்ளத்தில் கவிழ்வதற்குமுன்  சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர் லாரியின் முன் சக்கரம் பாதி பள்ளத்தில் தொங்கியபடி லாரியை கட்டுப்படுத்தி நிறுத்தியுள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை 

உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு இருந்த லாரியின் ஒட்டுனர்  அவசர எண்ணிற்கு  அழைத்து போலீஸுக்குத் தகவல் சொல்ல,  உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,  லாரி ஒட்டுனரை பத்திரமாக மீட்டனர்.   லாரியில் அதிக லோடு இருந்ததால் ஒவ்வொரு அரிசி மூட்டைகளாக கீழே இறக்கி    அதன் பின்னர் லாரியை கிரேன் மூலம் பத்திரமான மீட்க போலீசார் தீயணைப்பு படையினர்  தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?