வாயில் சிறுநீர் கழித்து அட்டூழியம்..!! காதல் விவகாரத்தில் அரங்கேறிய கொடுமை..!!

Published : Dec 23, 2019, 02:06 PM IST
வாயில் சிறுநீர் கழித்து  அட்டூழியம்..!! காதல் விவகாரத்தில் அரங்கேறிய  கொடுமை..!!

சுருக்கம்

அதை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதை வெளியிட்டுள்ளனர் .  ஆனால் இந்த கொடூரத்தை அங்கிருந்தவர்கள் யாரும் தட்டிக் கேட்கவில்லை . 

காதல் விவகாரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து அடித்துள்ளதுடன்  அவரது வாயில் சிறுநீர் கழித்து கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஒடிசா மாநிலம் ஹூட்டா மாவட்டத்திலுள்ள கைபதார்  கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.  பங்கிடா  கிராமத்தை சேர்ந்தவர் சௌமியா ரஞ்சன் தாஸ் இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஆவார் .  இவர் அதே பகுதியை சேர்ந்த உயர்  உயர்சாதிப் பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.  

இந்நிலையில் தனது காதலியை சந்திக்கச் சென்றார் சௌமியா, அப்போது  அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திர புயான் மற்றும்  கட்டியா பல்டாசிங் ஆகிய இரண்டு இளைஞர்கள் சௌமியா ரஞ்சன் தாஸ் வழிமறித்ததுடன்,  அவரை தென்னை மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளனர் . மேலும்  அவர்கள் அந்த இளைஞரை கேவலமான வார்த்தைகளால் திட்டியதுடன் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.  அதை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதை வெளியிட்டுள்ளனர் .  ஆனால் இந்த கொடூரத்தை அங்கிருந்தவர்கள் யாரும் தட்டிக் கேட்கவில்லை .  சமூக வலைதளத்தில் வெளியான அந்த வீடியோ மிக வேகமாக பரவியது. 

முன்னதாக அந்த வாலிபரை அந்த இரண்டு இளைஞர்களும் அடித்து துன்புறுத்தியதில் ,சோர்ந்துபோன அந்த வாலிபர்  தாகத்தில்  குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். உடனே அந்த இருவரும்   தாழ்த்தப்பட்ட இளைஞர்  வாயில்  சிறுநீர் கழித்துள்ளனர்.   இக்கொடூரம் சம்பவம் வீடோயோவாக சமூக வலைதளத்தில் வெளியானதை அடுத்து போலீசார் இச் சம்பவம் குறித்து வழுக்கு பதிவு செய்து விசாரித்ததில் காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்து என்றும் பாதிக்கப்பட்ட இளைஞர்  தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது இதனை அடுத்து இளைஞரை தாக்கி கொடுமைபடுத்திய  இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?