நள்ளிரவில் பயங்கரம்..! லாரி ஓட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை..!

Published : Feb 25, 2020, 03:37 PM IST
நள்ளிரவில் பயங்கரம்..! லாரி ஓட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை..!

சுருக்கம்

சேலம் அருகே லாரி ஓட்டுநர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சேகர்(27). இவரது மனைவி சுகன்யா (26). சொந்தமாக லாரி வைத்திருக்கும் சேகர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு சாலையோரமாக லாரியை நிறுத்தியிருந்த சேகர், இரவு லாரியிலேயே தூங்கிக்கொள்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் இரவு சூர்யா தனது தம்பி சுரேந்திரனுக்கு செல்போனில் அழைத்து, ரயில்வே கேட் அருகே வைத்து சிலர் தன்னை அரிவாளால் வெட்டியுள்ளனர் எனவும் தன்னை காப்பாற்ற வருமாறும் கூறி கதறியிருக்கிறார். 

பதறிப்போன சுரேந்திரன் உடனடியாக சம்பவ இடத்திற்கு உறவினர்களுடன் விரைந்தார். அங்கு சேகர் கை,கால்,தலை ஆகிய இடங்களில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் துடித்துக்கொண்டிருந்தார். அவரை மீட்ட உறவினர்கள் அருகே இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சேகர் கொண்டு செல்லப்பட்டநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.

கழிவறை கோப்பையில் கைவிட்டு சிக்கிக்கொண்ட வாலிபர்..! பதறிப்போன உறவினர்கள்..!

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலைவழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.. முதற்கட்ட விசாரணையில் சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில் அப்பகுதியில் இருக்கும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் சேகருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவலர்கள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!
காரில் திமுக கொடியுடன்.. ஃபுல் மப்பில் போயி யாரையாவது சாக அடிக்கவா? இப்படி பேசிட்டு கேஸ் போடாத போலீஸ்