ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்..! தானும் தற்கொலை செய்த பரிதாபம்..!

Published : Feb 25, 2020, 12:04 PM IST
ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்..! தானும் தற்கொலை செய்த பரிதாபம்..!

சுருக்கம்

கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஒரு வயது குழந்தையை கொலை செய்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன்(31). இவரது மனைவி துர்கா(28). இந்த தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஒரு வயதில் ரித்திக் என்கிற ஆண் குழந்தை இருந்துள்ளது. பிரபாகரன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அவிநாசி அருகே இருக்கும் பெரியாயிபாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனைகள் காரணமாக அடிக்கடி தகராறு நிகழ்ந்து வந்துள்ளது. இதனால் துர்கா மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. நேற்று பிரபாகரன் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் துர்கா தனது குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார். அப்போது வாழ்வில் விரக்தியடைந்த நிலையில் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். தான் இறந்த பிறகு குழந்தை பரிதவிக்கக்கூடாது என நினைத்த அவர், மனதை கல்லாகி பெற்ற குழந்தையை கொலை செய்துள்ளார். பின் வீட்டில் தூக்கு போட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

துர்காவை பார்ப்பதற்காக வந்த அக்கம்பக்கத்தினர் குழந்தையும் அவரும் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைத்தனர். உடனடியாக துர்காவின் கணவருக்கும் காவல்துறைக்கும் அவர்கள் தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் இருவரின் உடல்களையும் மீது பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணம் முடிந்து 3 ஆண்டுகளே ஆகுவதால் துர்காவின் கணவர் பிரபாகரனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ஜனாதிபதி மாளிகையில் ராஜநடை போட்ட டிரம்ப்..! பிரம்மாண்ட அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு..!

PREV
click me!

Recommended Stories

ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி
கதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்