பாலியல் தேவைகளுக்கு அனுகவும்.. பக்கத்து வீட்டு ஆன்டி நம்பரை போஸ்புக்கில் பகிர்ந்த சாடிஸ்ட் இளைஞன்.

By Ezhilarasan BabuFirst Published Sep 10, 2022, 1:21 PM IST
Highlights

திருமணமான பெண்ணுக்கு செல்போனில் ஆபாச  குறுஞ்செய்தி அனுப்பி  பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். எம்ஜிஆர் நகர் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

திருமணமான பெண்ணுக்கு செல்போனில் ஆபாச  குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். எம்ஜிஆர் நகர் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் கைபேசி எண்ணை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து, உல்லாசத்திற்கு தொடர்பு  கொள்ளவும் என அந்த இளைஞர் பகிர்ந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ஆறு மாதக் குழந்தை முதல் 60 வயது பெண்மணிகள் வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். பொது இடங்கள், பேருந்துகள், மருத்துவமனைகள், சினிமா தியேட்டர், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் பெண்கள் மீது பாலியல் சீண்டல் அரங்கேறி வருகிறது.

இதையும் படியுங்கள்: திருவல்லிக்கேணி லாட்ஜியில் காதலர்கள் தற்கொலையில் திடீர் திருப்பம்; ஒரேநேரத்தில் 3 பேரை டூட் விட்டதால் விபரீதம்

இது ஒருபுறம் என்றால், இன்னும் சிலர் பெண்களை மனரீதியாக துன்புறுத்தி அவர்களையும் பாலியல் இச்சைக்கு அடி பணிய வைக்கும் முயற்சிகளையும் அரங்கேறி வருகின்றனர். இது போன்ற ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. திருமணமான ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு அழைத்து இளைஞன் ஒருவர் டார்ச்சர் செய்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதையும் படியுங்கள்: வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. கைவிட மறுத்த கணவன் - நடுராத்திரியில் மனைவி செய்த சம்பவம்!

முழு விவரம் பின்வருமாறு:- சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் சுயதொழில் செய்து கணவன் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார், இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் கடந்த மாதம் 22ஆம் தேதி அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்புகொண்டு பேசியதுடன், அன்றுமுதல் ஆபாச குறுஞ்செய்தி மற்றும் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். தன்னுடன் உடலுறவுக்கு வருமாறு அழைத்து தொல்லை கொடுத்து வந்ததுடன், அந்தப் பெண்ணின்  கைபேசி எண்ணை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து பாலியல் தேவைக்கு தொடர்பு கொள்ளவும் எனக்கூறி பகிர்ந்துள்ளார்.

இதனால் அந்தப் பெண்ணுக்கு பல விரும்பத்தகாத அழைப்புகள் வந்துள்ளது, அதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் தனக்கு நேர்த்து வரும் கொடுமை குறித்து திநகரிலுள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி புகார் கொடுத்தார். இதேபோல சைபர் கிரைம் பிரிவிலும் அதைத் தொடர்ந்து எம்ஜிஆர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அப் புகாரின் பேரில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்தப் பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய நபரின் செல்போன், முகநூல் கணக்கை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அந்த நபர் பாதிக்கப்பட்ட பெண் வாழும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது, இந்நிலையில் வீட்டில் பதுங்கி இருந்த ராஜேஷ் நேற்றுமாலை எம்ஜிஆர் நகர் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அந்தப் பெண்ணின் மீது ஏற்பட்ட சபலத்தின் காரணமாக அந்த இளைஞர் இப்படி டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது.  
 

click me!