பெண்களே உஷார்.. முகம் தெரியாத ஒருவர் உங்களை புகைப்படம் எடுத்தால் அது என்ன கதி ஆகிறது என்று பாருங்கள். கொடுமை..

By Ezhilarasan BabuFirst Published Sep 4, 2021, 6:00 PM IST
Highlights

அதிக புகைப்படங்களை அனுப்ப வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் அதிக பணம் செலுத்த வேண்டும் என கூறி Google Pay, Paytm போன்றவற்றின் மூலம் அவர்களிடம் பணம் பெற்று வந்துள்ளார்.

அழகிய பெண்களை புகைப்படம் எடுத்து அதை ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் வெளியிட்டு லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு புகைப்படம் என்பது சாதாரணமான விஷயம் அல்ல அது  ஒவ்வொன்றும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கக்கூடிய பொக்கிஷங்கள் இல்லை இல்லை, சில கிரிமினல் பேர்வழிகளுக்கு அது பணம் ஈட்டித் தரும் துருப்புச் சீட்டுகள் என்றும் போலீசார் எச்சரிக்கின்றனர். அந்த அளவுக்கு சில அழகிய பெண்களின் புகைப்படங்களை மார்பிங்  செய்து இளைஞர் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

அந்த இளைஞரின் பெயர் ஜிமோன், அவர் கேரள மாநிலம் பாலாகோட்டில் வசித்து வருகிறார், வீட்டில் இருந்த அவரை திடீரென போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கூறிய தகவல்களைகேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த இளைஞர் ஒரு சிறிய புகைப்படம் கிடைத்தால்கூட அதை பலவகைகளில் மார்பிங் செய்து அசல் புகைப்படம் போன்றே மாற்றக்கூடிய திறமை உள்ளவர்.பல அழகிய பெண்களின் முகத்தை வெட்டி அதை நிர்வாண படங்களுடன் ஒட்டி மார்ப்பிங் செய்வதில் கில்லாடி. பொழுதுபோக்காக செய்து வந்த விஷயத்தை நண்பர்கள் பலருடம் பாராட்ட. ஒரு கட்டத்தில் தனக்கு தெரிந்த இந்த வித்தையை  முழுநேர தொழிலாகவே மாற்றிக் கொள்ள முடிவு செய்தார் அவர்.

இதனையடுத்து அழகிய பெண்கள் வந்து செல்லும் பொது இடங்கள், நண்பர்களிட் வீடுகள், காய்கறி சந்தைகள், பல்பொருள் அங்காடிகள் என பெண்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களுக்கு சென்று அவர்களுக்கு தெரியாமலேயே தனது அதி தொழில்நுட்பம் மிக்க மொபைல் போனில் அவர்களை படம் பிடிப்பார் இவர். பின்னர் அவைகளை மொபைல் போனில் எடிட்டிங் செயலி மூலமாக அதை ஆபாசமாக மாற்றுவதுடன், அவற்றை சமூக வலைதளங்களில் சில நெட்டிசன்களுக்கு விற்று வந்துள்ளார். 

ஜிமோன் சமூக வலைதளங்களில் பெண்கள் பெயரில் பல போலி கணக்குகளை துவக்கி, டெலிகிராம், ஷேர் சாட் போன்ற தலங்களை இணைந்து அவற்றில் தான் தயாரிக்கும் பெண்களின் புகைப்படங்களை பகிர்ந்து வந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு பல இளைஞர்கள் இவர் உருவாக்கிய  கணக்குகளில்  இணைய தொடங்கினர். அந்த இளைஞர்களுடன் தனிபட்ட விஷயங்களை கேட்டு சாட்டிங் செய்வது மற்றும் அவர்களுடன் ஆபாசமாக உரையாடுவது என ஈடுபட்டு வந்துள்ளார் இவர், அதில் பல இளம் பெண்கள் சிறுமிகள் போன்றவர்களுடன் நட்பு ஏற்படுத்தி அவர்களுடனும் உரையாடி வந்த இவர், பல ஆண்களிடம் ஆபாசமாக உரையாடி வந்துள்ளார். பின்னர் அதில் செக்ஸில் அதிக ஆர்வம் காட்டுபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தான் பிரத்யேகமாக தயாரித்து வைத்துள்ள பெண்களின்  நிர்வாண புகைப்படங்களை,தனது படம் என கூறி அவர்களுக்கு விநியோகித்து பணம் சம்பாதித்து வந்துள்ளார் இவர்.

அதிக புகைப்படங்களை அனுப்ப வேண்டுமென்றால் அதற்கு அதிக பணம் செலுத்த வேண்டும் என கூறி Google Pay, Paytm போன்றவற்றின் மூலம் அவர்களிடம் பணம் பெற்று வந்துள்ளார். கடந்த ஒரு சில மாதங்களிலேயே அவர் ஒன்றரை லட்சம் ரூபாய் இதன் மூலம் சம்பாதித்துள்ளார். இந்நிலையில் தான் எப்போதோ எடுத்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட அதைப்பார்த்த அந்த பெண் தனது புகைப்படம் சமூக வலைதளத்தில் ஆபாசாமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தனது கணவரின் உதவியுடன் அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் மொபைல் போன் மற்றும் இணைய ஐபி முகவரியின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் ஜிமோனை கையும் களவுமாக கைது செய்ந்தனர்.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், பெண்களின் புகைப்படம் என்பது சாதாரணமான விஷயம் அல்ல, அது இதுபோன்ற சமூக விரோதிகளின் பணம் ஈட்டும் துருப்புச் சீட்டாக கூட மாறும் அபாயம் உள்ளது. எனவே பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், இப்படி பல பெண்களை ரகசியமாக புகைப்படம் எடுத்து மார்பிங் செய்து அவதூறு  செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
 

click me!