குன்றத்தூர் அபிராமிக்கு அவ்வளவாக அறிமுகம் தேவை இருக்காது. பத்து மாதம் சுமந்து பெற்ற 2 குழந்தைகளை ஈவு இறக்கமின்றி 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி பாலில் விஷம் வைத்து தாயே கொன்றார்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற இரு குழந்தைகளை, பாலில் விஷம் வைத்து கொன்ற குன்றத்தூர் அபிராமி தொடர்பான வழக்கின் தீர்ப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
குன்றத்தூர் அபிராமிக்கு அவ்வளவாக அறிமுகம் தேவை இருக்காது. பத்து மாதம் சுமந்து பெற்ற 2 குழந்தைகளை ஈவு இறக்கமின்றி 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி பாலில் விஷம் வைத்து தாயே கொன்றார். இவரது கணவர் விஜயுடன் வாழ்ந்து கொண்டே அதே பகுதியில் இருக்கும் பிரியாணி கடையில் பணியாற்றிய சுந்தரம் என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
undefined
இந்நிலையில், கணவனை கைவிட்டுவிட்டு, சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்தார். தனது இரண்டு குழந்தைகளையும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு தலைமறைவானார். தலைமறைவான அபிராமியை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக, குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றதாக அபிராமி கொடுத்த வாக்கு மூலம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதைத் தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு சுமார் 3 ஆண்டுகளாக செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இவர்களை போலீசார் நேற்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.. அப்போது இருவருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
வழக்கில் அபிராமியின் உறவினர்கள் உட்பட 22 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 21-பேரின் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் விசாரித்துள்ளனர். எஞ்சியுள்ள ஒரே ஒரு சாட்சியின் மீது விசாரணையும், வழக்கின் மீதான வாதமும் மட்டுமே நடைபெற உள்ளது. ஆகையால், இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.