ஏமாற்றி கல்யாணம்… பல ஆண்களுடன் தொடர்பு…. ஆத்திரத்தில் இளம் பெண்ணை போட்டுத் தள்ளிய இளைஞர் !!

Published : Nov 01, 2018, 10:00 AM IST
ஏமாற்றி கல்யாணம்… பல ஆண்களுடன் தொடர்பு…. ஆத்திரத்தில் இளம் பெண்ணை போட்டுத் தள்ளிய இளைஞர் !!

சுருக்கம்

தனது முதல் திருமணத்தை மறைத்து மீண்டும் திருமணம் செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல் பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த இளம் பெண்ணை அவரது காதலேனே கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ரோஸ் காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லோகேஸ்வரி . இவர்களுக்கு கார்த்திகேயன் என்ற 4 வயது  மகன் உள்ளான். லோகேஸ்வரி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரி கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது மகன் கார்த்திகேயறும் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்தார்.

இதையடுத்து சிறுவன் கார்த்திகேயன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது லோகேஸ்வரியுடன் அடிக்கடி போனில் பேசிய ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த கவுரி சங்கரை  பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் லோகேஸ்வரியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில் அவர் ஈரோடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எண்ணை நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும், பகுதி நேர வேலையாக தனியார் நிறுவனத்தின் உடல் எடையை குறைக்கும் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும் தெரிவித்தார்.

அந்த நிறுவனத்தின் கூட்டத்தில்  லோகேஸ்வரியும் கலந்து கொள்ள வந்தார். அப்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறியது.கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னிமலை கோவிலில் வைத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து அவர் அடிக்கடி கோத்தகிரி வந்து லோகேஸ்வரியுடன் தங்கி வந்தாக குறிப்பிட்டுள்ளார், அதன் பின்னர் தான் அவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. மேலும் லோகேஸ்வரிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தாக கௌரி சங்கர் கூறியுள்ளார்.  

இந்நிலையில் கடந்த  27-ந் தேதி மாலை 5 மணிக்கு கோத்தகிரி வந்த கௌரி சங்கர், லோகேஸ்வரியிடம் இது குறித்து கேட்டபோது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லோகேஸ்வரி ,  தாலியை கழற்றி வீசியுள்ளார்.  இதனால் கோபம் அடைந்த கௌரி சங்கர் அருகில் இருந்த  கத்திரிகோலால் லோகேஸ்வரி கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார்.

அப்போது அங்கு நின்றிருந்த அவரது மகனையும் கழுத்தை அறுத்துப் போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டதாக வாக்குமூலம்  அளித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

திருமணமான ஒரு மாதத்தில் கணவருக்கு வந்த அந்த சந்தேகம்.. மனவேதனையில் கதறிய 26 வயது ஐஸ்வர்யா.. இறுதியில் அதிர்ச்சி
சிறுமியிடம் சில்மிஷம் செய்துவிட்டு எஸ்கேப்.. போலீசிக்கு தண்ணீ காட்டி குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்.. 5 மாதங்களில் தீர்ப்பு