Vismaya case: கேரளத்தை உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கு.. கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம்.!

By vinoth kumar  |  First Published May 24, 2022, 1:41 PM IST

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொல்லம் கூடுதல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.


கேரளாவில் வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொல்லம் கூடுதல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கேரளா கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் விஸ்மயா(24). ஆயுர்வேத மருத்துவத்தில் இறுதி ஆண்டு படித்து வந்த விஸ்மயா கொல்லம் உள்ள சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த கிரண் குமார் என்பவருடன் கடந்த 2020ம் ஆண்டு மார்ச்சில் இவர்களுக்கு இடையே திருமணம் நடைபெற்றது.  இந்த திருமணத்திற்கு வரதட்சணையாக விஸ்மயா குடும்பத்தினர் 100 பவுன் நகை, 1 ஏக்கர் நிலம், 1 டொயோட்டா கார் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். ஆனாலும், வரதட்சணை கேட்டு விஸ்மயாவை கிரண் மோசமாக தாக்கி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். 

Latest Videos

இந்நிலையில், 2020ம் ஆண்டு  ஜூன் மாதம் விஸ்மயா மர்மமான முறையில் கிரண் வீட்டில் இறந்து கிடந்தார். விஸ்மயாவின் மரணம் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. அவரது மரணம்  நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  விஸ்மயாவை அவரது கணவர் கிரண் குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஜூன் 22ம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் விஸ்மயா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு உறவினருக்கு விஸ்மயா காயமடைந்த படங்களை அனுப்பியதாக தெரியவந்துள்ளது. 

இதற்கிடையில், விஸ்மயா பெற்றோர் விஸ்மயா மரணத்திற்கு கிரண் குமார் குடும்பத்தினரும் காரணம் என குற்றம்சாட்டினர். இந்நிலையில், இந்த வழக்கில் கொல்லம் கூடுதல் நீதிமன்றம் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் கிரண் குமார் குற்றவாளி என நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், இன்று தண்டனை விவரம் வெளியாகியுள்ளது. அதில், கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

click me!