
அரியலூர் அருகே இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து அவதூறாக பேசியதாக நண்பனை படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் சென்னையில் பிளம்பிங் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விக்னேஷ் அவரது நண்பரான தர்மராஜ் இருவரும் மது குடிக்க சென்றுள்ளனர். ஆனால், மீண்டும் விக்னேஷ் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று ஊருக்கு வெளியில் விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க;- பிரபல ஹோட்டல் சட்னியில் இறந்து கிடந்த பல்லி.. தெனாவட்டாக பதில் சொன்ன ஓனர்! அதிரடி நடவடிக்கையில் உணவுத்துறை.!
இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆய்வு செய்த போது விக்னேஷின் தலை பின்பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி தடயடங்கள் இருந்தன. இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடைசியாக தர்மராஜுடன் விக்னேஷ் இருந்தது தெரிந்தது.
இதனையடுத்து போலீசார் தர்மராஜை பிடித்து விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தர்மராஜ் கொஞ்சம் திக்கி திக்கி பேசுவார். சரளமாக பேச வராது. மதுபோதையில் விக்னேஷ் உன்னைப்போலத்தான் உன் ஆட்களும் இருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மாவை திட்டியுள்ளார். இதன்காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தர்மராஜ் நண்பன் என்றும் கூட பார்க்காமல் விக்னேஷை ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறியுள்ளார். இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அண்ணியுடன் உல்லாசம்.. கடுப்பில் இருந்த கொழுந்தன் என்ன செய்தார் தெரியுமா?