தம்பி மனைவி உள்ளிட்ட பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு.. மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர்.. போலீசில் பகீர்

Published : Dec 01, 2021, 10:46 AM IST
தம்பி மனைவி உள்ளிட்ட பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு.. மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர்.. போலீசில் பகீர்

சுருக்கம்

சென்னை புரசைவாக்கம் வெள்ளாள தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (33), தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, ஹேமாவதி (24) என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு, ஆயுஸ்யா (5) என்ற குழந்தை உள்ளது. வினோத்குமாருக்கு அவரது சகோதரர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதை அவரது மனைவி ஹேமாவதி பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

பல பெண்களுடனான கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்தேன் என கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கம் வெள்ளாள தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (33), தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, ஹேமாவதி (24) என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு, ஆயுஸ்யா (5) என்ற குழந்தை உள்ளது. வினோத்குமாருக்கு அவரது சகோதரர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதை அவரது மனைவி ஹேமாவதி பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுதவிர வினோத்குமார் வேலை செய்யும் அலுவலகத்தில் பணியாற்றும் கொளத்தூரை சேர்ந்த பெண் உள்பட மேலும் சில பெண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்ததால், மனமுடைந்த ஹேமாவதி, தனது கணவரை பிரிந்து வடபழனியில் உள்ள தாய் வீட்டில், குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி விவாகரத்துக்கு விண்ணப்பித்து, வழக்கு நடைபெற்று வந்த நிலையில், வினோத்குமார் தனது குடும்பத்துடன் ஹேமாவதி வீட்டிற்கு சென்று, இனிமேல் இதுபோன்று நடக்க மாட்டேன் என்று மனைவி மற்றும் மாமனாரிடம் உறுதியளித்துளார். இதனால், விவாகரத்து வழக்கை ஹேமாவதி திரும்ப பெற்று, வினோத்குமாருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையே வினோத்குமார் மீண்டும் அந்த 2 பெண்களுடன் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதனால், தம்பதி இடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வினோத்குமார் நேற்று முன்தினம் மாலை தனது மனைவியை சுயநினைவு இல்லாத நிலையில் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். 

அப்போது ஹேமாவதியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும், உயிரிழந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அடையாளம் தெரிந்தது. இதுபற்றி கணவரிடம் கேட்டபோது, நான் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்தபோது, மனைவி மயங்கிய நிலையில் கிடத்ததார். அதனால் அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு கொண்டு வந்தேன், என தெரிவித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் மருத்துவர்கள் கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீஸ் வருவதற்குள் எஸ்கேப் ஆக பார்த்த கணவர் வினோத்குமாரை மடக்கி பிடித்தனர். அவரது கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், பல பெண்களுடன் எனக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. இதனை ஹேமாவதி கண்டித்து தொடர்ந்து என்னிடம் சண்டை போட்டதால் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் வினோத்குமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!