சினிமாவை மிஞ்சிய தரமான சம்பவம்.. சென்னை தொழிலதிபரை கடத்த பக்கவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பெண் டாக்டர்.!

By vinoth kumarFirst Published Aug 22, 2022, 1:24 PM IST
Highlights

சென்னை ரியல் எஸ்டேட் தொழிலதிபர் துப்பாக்கி முனையில் கடத்தப்பப்பட்ட 2 மணிநேரத்தில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை ரியல் எஸ்டேட் தொழிலதிபர் துப்பாக்கி முனையில் கடத்தப்பப்பட்ட 2 மணிநேரத்தில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை தி.நகர் ராமசாமி தெருவை சேர்ந்தவர் சரவணன்(41). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், தொழிலதிபர் சரவணனை துப்பாக்கி முனையில் கடத்திவிட்டதாகவும், வீட்டில் இருந்த, சொகுசு கார், நகைகள், பணத்தையும் அள்ளி சென்று விட்டதாக அவரது சகோதரர் முத்துகுமரன் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து,  சிசிடிவி பதிவுகள் மற்றும் சொகுசு கார்களின் பதிவு எண்களை வைத்து தீவிர கண்காணித்து வந்தனர். 

இதையும் படிங்க;- கூலிப்படை ஏவி காதல் கணவர் கொலை.. நாடகமாடிய மனைவியின் குட்டு அம்பலம்.. வெளியான பரபரப்பு தகவல்..!

அப்போது, தொழிலதிபரை கடத்தி சென்ற நபர்களின் கார்கள், ஓஎம்ஆர் சாலை வழியாகச் செல்வது தெரியவந்தது.  உடனே, அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டனர். அப்போது, மாமல்லபுரம் அருகே தொழிலதிபர் சரவணன் கடத்தப்பட்ட கார் வந்து கொண்டிருந்த போது சுற்றிவளைத்து பிடித்தனர். அதாவது, புகார் கொடுத்த 2 மணிநேரத்தில் தொழிலதிபரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் தொழிலதிபர் சரவணனை கடத்தியதாக மயிலாடுதுறையை சேர்ந்த சவுடு மணல் ஒப்பந்ததாரர் ஆரோக்கியராஜ்(41), அவரது கார் ஓட்டுனர் அரவக்குறிச்சியை சேர்ந்த அரவிந்த்(23), சென்னை பெருங்குடியில் வசிக்கும் பி.டெக் மாணவன் அப்ரோஸ்(23), மதுரை கல்லூரியில் படிக்கும் மாணவன் அஜய்(24), விஜயபாண்டி(25) மற்றும் கோவை மத்திய சிறையில் பணியாற்றும் சிறை காவலர் நாகேந்திரன் (31) ஆகிய 6 பேரை மாம்பலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 சொகுசு கார்கள், பணம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் தொழிலதிபர் சரவணனை கடத்த திட்டம் தீட்டி கொடுத்தது ஒரு பெண் மருத்துவர் என்ற அதிர்ச்சி தகவலை கடத்தல்காரர்கள் தெரிவித்தனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் தோல் மருத்துவமனை நடத்தி வரும் பெண் மருத்துவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், சரவணனும், சவுடு மணல் ஒப்பந்தக்காரர் ஆரோக்கியராஜும் நண்பர்களாக இருந்துள்ளனர். தொழிலதிபர் சரவணனுக்கு பல முக்கியப்புள்ளிகள் நண்பர்கள் என்பதால் சவுடு மணல் எடுக்கும் ஒப்பந்தத்தை வாங்கித்தருவதாக கூறி ஆரோக்கியராஜிடம் ரூ.4.50 கோடி பணம் வாங்கினார். ஆனால், சொன்னப்படி சரவணன் எந்த ஒப்பந்தமும் பெற்று தரவில்லை. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், தொழில் அதிபரை எப்படி கடத்துவது என்பது குறித்து ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது பெண் மருத்துவர் என்றும் ஆரோக்கியராஜ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  இது இருப்பதால்தானே எவளையோ தேடி போற! கொதிக்கும் வெந்நீரை எடுத்து ஆண் உறுப்பில் ஊற்றிய மனைவி!வலியால் அலறிய கணவர்

click me!