மிளகாய்பொடி தூவி செயினை பறித்த இளைஞர்கள்.... தடுக்கி விழுந்து போலீசிடம் சிக்கிய ‘விநோத’ சம்பவம் !

Raghupati R   | others
Published : Nov 27, 2021, 11:22 AM IST
மிளகாய்பொடி தூவி செயினை பறித்த இளைஞர்கள்.... தடுக்கி விழுந்து போலீசிடம் சிக்கிய ‘விநோத’ சம்பவம் !

சுருக்கம்

செயினை பறித்த இளைஞர்கள், போலீசுக்கு பயந்து தடுக்கி விழுந்து சிக்கிய சம்பவம் கரூரில் நடைபெற்று இருக்கிறது.  

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அலங்காரிபட்டி பகுதியை சேர்ந்தவர் புள்ளமநாயக்கர்.இவரருக்கு வயது 57.இவர் நேற்று தான் சொந்தவேலையாக தனது ஊரிலிருந்து பேரூக்கு சென்றுவிட்டு பின்பு தான் வீட்டிற்கு செல்வதற்காக கருமாதம்பட்டி பிரிவு சாலையில் உள்ள மாதாநாயக்கர் விவசாய காட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் முகத்தில் முக கவசம் அணிந்தபடி வந்த இரண்டு இளைஞர்கள், இவரிடம் வந்து மெல்ல பேச்சு கொடுத்துள்ளனர்.

அருகில் சாமி பார்ப்பவர்கள் வீடு உள்ளதா  ? என கேள்வி கேட்டு கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை தூவினர். அவரது கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு, அந்த இரண்டு இளைஞர்களும் பைக்கில் தப்பி சென்றுவிட்டனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள், தப்பிச்சென்ற நபர்களை பிடிக்க பைக்கில் தொடர்ந்து விரட்டி சென்றுள்ளனர். பின்தொடர்ந்து விரட்டி வருபவர்கள் மீது மிளகாய் பொடி தூவிய படியே சென்றுள்ளனர் செயினை பறித்த இளைஞர்கள்.

சிவாயம் பிரிவு சாலை வழியாக நுழைந்து பனிக்கம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த செயின் திருடிய நபர்கள்,  சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் இரண்டு நபர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நபர் தப்பி ஓடியுள்ளார். பைக்கை ஓட்டிச்சென்ற நபர் கீழே விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக அவரை பிடித்து குளித்தலை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் பொதுமக்கள்.

இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் திருச்சி மாவட்டம் புங்கனூர் ராம்ஜிநகர் பகுதியைச் சேர்ந்த கிரிநாதன் மற்றும் தப்பியோடியவர் ஏழுமலை என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் மீது பல காவல் நிலையங்களில் பைக் திருட்டு தொடர்பான வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.மிளகாய் பொடியை தூவி, நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் தடுக்கி விழுந்து வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை