திருப்பூர் மாவட்ட கலெக்டர் பெயரில் போலி பணி நியமன ஆணை கொடுத்து பல லட்சங்களை சுருட்டிய திருடனை தேடி வருகின்றனர்.
திருப்பூர் கலெக்டர் பெயரில் போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 7 லட்சம் மோசடி செய்யப்பட் டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 3 வாலிபர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர். திருப்பூர் நல்லூர் விஜயாபுரத்தை சேர்ந்த சூரியகுமார், பிரபாகரன்,பிரதீப்குமார் ஆகியோர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தமிழக அரசு முத்திரையுடன் திருப்பூர் கலெக்டர் வினீத் பெயரில் தயாரிக்கப்பட்ட பணி நியமன ஆணையை வைத்திருந்தனர். கலெக்டர் அலுவலக முத்திரை , கலெக்டரின் நேர்முக உதவியாளர் கையெழுத்துடன் அந்த பணி நியமன ஆணை வழங்கப்பட்டு இருந்தது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் , அலுவலக உதவியாளர் , இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு ஒவ்வொருவரிடமும் தலா ரூ. 2லட்சம் பெற்றுக்கொண்டு பணிநியமன ஆணை தங்களுக்கு கடந்த 15 - ந்தேதி ஏழுமலை பெஞ்சமின் என்பவர் வழங்கியதாகவும் , அவை போலி பணிநியமன ஆணை என்பது தெரிந்த தும் கலெக்டரிடம் முறையிட வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதில் சூரியகுமார் ஐ.டி.ஐயும், பிரபாகரன் மற்றும் பிரதீப்குமார் ஆகியோர் டிப்ளமோவும் படித்துள்ளனர். போலி பணி நியமன ஆணை பின்னர் கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாகுல் அமீதுவை யும் சந்தித்து பேசினார்கள். இதுகுறித்து பேசிய அந்த இளைஞர்கள், ‘சென்னையை சேர்ந்த ஏழுமலை பெஞ்சமின் என்பவர் எங்களுக்கு அறிமுகம் ஆனார்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் ,ரூ. 2 லட்சம் கொடுத்தால் வேலை பெற்றுக்கொடுப்ப தாகவும் கூறினார். இதை நம்பி அவர் அளித்த வங்கிக் கணக்கில் 3 பேரும் பணம் செலுத்தினோம். அதன்பி றகு கடந்த 15 - ந் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகத் துக்கு வருமாறு கூறினார். கலெக்டர் அலுவலகம் முன்பு வந்ததும் எங்கள் சான்றிதழ்களை சரிபார்த்து பின்னர் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வந்த அவர் பணிநியமன ஆணையை எங்களிடம் கொடுத்தார். அதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கையெழுத்து இருந்தது. அதன்பிறகு , தான் கூறிய பின்னர் பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் ராமநாதபுரத்தில் இதுபோல் போலி பணிநியமன ஆணை கொடுத்து ஏழுமலை பெஞ்சமினை போலீசார் கைது செய்தது தெரியவந்தது. அதன்பிறகே நாங்கள் ஏமாந்து போனது தெரிந்து கலெக்டரிடம் புகார் அளித் துள்ளோம்’ என்றார்கள். பின்னர் இது தொடர்பாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, அங்கு புறப்பட்டு சென்றனர். இந்த புகாரை பற்றி திருப்பூர் கலெக்டர் வினீத்திடம் கேட்ட போது , ‘போலி பணிநியமன ஆணை தொடர்பாக 3 பேர் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் மோசடி செய்த நபர் , ஏற்கனவே ராமநாதபுரத்தில் 20 பேரிடம் இதுபோல் மோசடி செய்து போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மாநகர போலீஸ் கமி ஷனர் விசாரணை நடத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.