
டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவர் பூங்காவில் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியின் மாளவியா நகரில் அரவிந்தோ கல்லூரிக்கு வெளியே பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கமலா நேரு கல்லூரியில் படிக்கும் இளம்பெண் தனது ஆண் நண்பருடன் பூங்காவிற்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த நபர் மாணவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், திடீரென தான் வைத்திருந்த இரும்புக் கம்பியால் மாணவியை பின் பக்கமாக பலமாக தாக்கியுள்ளார். இதில் மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேதடி வருகின்றனர்.