புழல் சிறையில் தீவிரவாத சதி செயலா.? 3 ஆண்டுகாலமாக வீடியோ காலில் பேசி திட்டமா.? யார் இந்த போலீஸ் பக்ருதீன்.?

By Ajmal Khan  |  First Published Jul 25, 2023, 1:33 PM IST

 புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளில் ஒருவரான போலீஸ் பக்ருதின், புழல் சிறையில் இருந்தே பயங்கரவாதிகளுக்கு போனில்  மெசேஜ் மற்றும் பல்வேறு வகைகளில் தொடர்புகொண்டு பேசியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


புழல் சிறையில் கொலை, கொள்ளை, தீவிரவாத செயல் என பல குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பல பிரிவாக புழல் சிறை பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தீவிரவாத சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் அத்வானி வரும்போது பைப் குண்டு வைத்தது,

வேலூரில் இந்து முன்னணி நிர்வாகி வெள்ளையப்பன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் கொலை தொடர்பாக தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.  இந்தநிலையில், போலீஸ் பக்ரூதீன் கடந்த 3 வருடமாக புழல் சிறையில் செல்போன் பயன்படுத்தி வாட்ஸ் அப் வீடியோ கால் பேசியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tap to resize

Latest Videos

சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர், குற்ற வழக்கில் சிக்கி, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்துள்ளார்.  அப்போது போலீஸ் பகரூதீனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வெளியே சென்றவர் போலீஸ் பக்ரூதீன் செய்ய சொல்லும் திட்டங்களை செயல்படுத்தியதாக தெரிகிறது. இதற்கிடையே சட்ட விரோத பணம் பறிமாற்றம் தொடர்பான வழக்கில் சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

அப்போது அவனது செல்போனை ஆய்வு செய்த போது சிறையில் இருக்கும் போலீஸ் பக்ரூதீனிடம் பேசியது தெரியவந்துள்ளது. கடும் பாதுகாப்புக்கு மத்தியில் போலீஸ் பக்ரூதீன் வாட்ஸ் அப் கால் மூலம் வெளி உலகில் தொடர்பு இருந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் வேறு ஏதேனும் தீவிரவாத செயல்களுக்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்

நெல்லையில் பயங்கரம்.. ஸ்கெட்ச் போட்டு அதிமுக பிரமுகரை போட்டு தள்ளிய கொடூர கும்பல்..!

click me!