பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கூடம் ஒன்றில் உதவியாளராக இருந்த மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் (43) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, மாணவி தேசப்பிரியாவிடம் கல்லூரி ஊழியர் செந்தில், காதலிப்பதாக கூறி உள்ளார். ஏற்கனவே திருமணமானவர் என்பதால் இவரது காதலை ஏற்க மறுத்துவிட்டார். இவர் ஏற்கனவே கல்லூியில் படிக்கும் போதே ருண்பாண்டியன் (24) என்ற மாணவனை காதலித்து வந்துள்ளார்.
திருமணம் செய்யுமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்த கல்லூரி ஊழியரை காதலனை வைத்து தீர்த்துக்கட்டிய கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கீழ் பென்னாத்தூரை அடுத்த திடீர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். விவசாயி. இவரது மகள் தேசப்பிரியா (23). கடந்த ஆண்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். அப்போது, அதே பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கூடம் ஒன்றில் உதவியாளராக இருந்த மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் (43) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, மாணவி தேசப்பிரியாவிடம் கல்லூரி ஊழியர் செந்தில், காதலிப்பதாக கூறி உள்ளார். ஏற்கனவே திருமணமானவர் என்பதால் இவரது காதலை ஏற்க மறுத்துவிட்டார். இவர் ஏற்கனவே கல்லூியில் படிக்கும் போதே ருண்பாண்டியன் (24) என்ற மாணவனை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், 3 ஆண்டுகள் படிப்பு முடிந்து விட்டநிலையில் உயர் படிப்பு படிப்பதற்காக திருப்போரூர் அடுத்த காலவாக்கத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு ஒன்றில் சேர்ந்துள்ளார். இதனை அறிந்த செந்தில் அந்த பணியில் சேர்ந்து மீண்டும் அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தேசப்பிரியா தனது காதலர் அருண்பாண்டியனிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, இருவரும் சேர்ந்து செந்திலை கொலை செய்ய திட்டமிட்டனர்.
செந்திலுக்கு போன் செய்து பேசிய தேசப்பிரியா, உணவு இடைவேளையின்போது தான் கல்லூரியை விட்டு வெளியே வருவதாகவும், சந்தித்து பேசலாம் என்றும் கூறி உள்ளார். இதை நம்பி, செந்தில் கல்லூரிக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் காத்திருந்தார். பிற்பகல் 2 மணியளவில் கல்லூரியை விட்டு வெளியே வந்த தேசப்பிரியா தனியாக நின்றிருந்த செந்திலை சந்தித்து பேசி உள்ளார். சிறிது நேரத்தில் அங்கு அருண்பாண்டியனும் வந்துள்ளார். நாங்கள், இருவரும் காதலிக்கிறோம், எங்களை தொல்லை செய்ய வேண்டாம் என்றும் கூறி உள்ளனர்.
இதில், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து ஆத்திரத்தில் அருண்பாண்டியன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்திலின் கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநர் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இக்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து தேசப்பிரியா மற்றும் அருண்பாண்டியன் ஆகிய இருவரையும் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.