வேறு யாரையும் நீ திருமணம் செய்யகூடாது.. என்னோடு தான் உல்லாசமாக இருக்கணும்.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல்.!

Published : Dec 30, 2021, 03:15 PM IST
வேறு யாரையும் நீ திருமணம் செய்யகூடாது.. என்னோடு தான் உல்லாசமாக இருக்கணும்.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல்.!

சுருக்கம்

ஆத்திரமடைந்த, லலிதா அவரிடம் வேறு யாரையும் நீ திருமணம் செய்யகூடாது. நாம் சென்னைக்கு சென்று பிழைத்துக்கொள்ளலாம் என அழைத்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

கள்ளக்காதல் விவகாரத்தில் 40 வயது பெண் சாக்குமூட்டையில் கட்டி கொலை செய்த விவகாரத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் கொசவம்பட்டி ரோஜா நகரில் உள்ள கிணற்றில் கடந்த 22ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண்  சடலம் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்யப்பட்ட பெண் யார்  என விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பெண், கொசவம்பட்டியை சேர்ந்த கணவரை இழந்த லலிதா(40) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த எம்எஸ்சி பட்டதாரியான  சுரேந்தர் (26) என்பவரை, சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, லலிதாவை கொலை செய்ததாக சுரேந்தர் ஒப்புக்கொண்டார்.

 இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், லலிதாவின் கணவர் 20 ஆண்டுக்கு முன்பே உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். லலிதா கடலை வியாபாரம் செய்துவந்தார். சுரேந்தரின் பெற்றோர் நடத்தி வந்த மளிகைக்கடை அருகில் லலிதா வசித்ததால் அவருக்கு சுரேந்தர் உதவி செய்து வந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

நாளடைவில் இந்த விவகாரம்  சுரேந்தர் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, பெற்றோர் சுரேந்தருக்கு வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதனால் சுரேந்தர் லலிதாவை சந்திக்காமல் விலகி இருந்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த, லலிதா அவரிடம் வேறு யாரையும் நீ திருமணம் செய்யகூடாது. நாம் சென்னைக்கு சென்று பிழைத்துக்கொள்ளலாம் என அழைத்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 15ம் தேதி லலிதாவை ஒரு காரில் அழைத்துக்கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்ற சுரேந்தர் அவரை அடித்து கொலை செய்து, சாக்கு மூட்டையில் திணித்து கிணற்றில் வீசியுள்ளார் என்பது தெரிவித்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி