Inba Track Arrested: அளவில்லாமல் பேசிய ஆபாச யூடியூபர்; தலையில் தட்டி இழுத்துச் சென்ற சைபர் கிரைம் போலீஸ்

By Velmurugan s  |  First Published Dec 8, 2023, 8:53 AM IST

சமூகவலைதளங்களில் ஆபாசத்தை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட இளைஞரை திருச்சி சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருச்சி மாவட்டம். சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் விஜய் இணைய மற்றும் சமூக வலைதள குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்த போது, கடந்த 4ம் தேதி சமுகவலைதளமான YouTube மற்றும் Instagram பக்கங்களை பார்த்துக் கொண்டு இருந்த போது inba's track என்ற பெயரில் புதுக்கோட்டை மாவட்டம், மகாலிங்கம் என்பவரது மகன்  இன்பநிதி(வயது 30). சமூக வலைதளங்களில் ஆபாசத்தை தூண்டும் வகையில் பேசுவது போல சமூக வலைதளங்களில் ஆங்கிலத்தில் TEXT வருவது போல mono-acting மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் இவரின் mono-acting வீடியோக்களை பார்க்கும்போது வீடியோக்கள் அனைத்தும் அருவறுக்கத்தக்க வகையிலும், ஆபாசமான வகையிலும் உள்ளது. இந்த வீடியோக்களை பார்க்கும் மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் இளைஞர்களிடம் மீண்டும் வீடியோக்களை பார்க்க தூண்டி, பாலுணர்வுகளை தூண்டும் வகையிலும், கணவன், மனைவி உறவு முறை பற்றி ஆபாசமாகவும், மேலும் முதலிரவு பற்றிய வீடியோக்களை அனுப்பியும். பெண்களை பற்றி தவறாக சித்தரித்தும் mono-acting மூலம் பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

Durai Dayanidhi: மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு என்ன ஆச்சு? நேரில் சென்று விசாரித்த முதல்வர் ஸ்டாலின்?

இன்ஸ்டாகிராமில் 82,000-க்கும் மேற்பட்ட Followers மற்றும் யூடியூபில் 1.93.000 சப்ஸ்கிரைபர்களை வைத்துள்ளார். இவரது வீடியோக்களைப் பார்க்கக் கூடிய குழந்தைகள் மற்றும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இடையே பாலியல் தொடர்பான எண்ணங்கள் ஏற்பட்டு பாலியல் குற்றச் செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதாலும், இதனால் இளைஞர் சமூதாயத்திற்கு சீர்கேடு ஏற்படும் வகையிலும், மேலும் பெண்களின் நாகரீகத்தை இழிவுப்படுத்தும் வகையில் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இது தொடர்பாக திருச்சி மாவட்டம். சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்பநிதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!