கள்ளக்காதல் விவகாரம்... அபிராமி குறித்து அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்!

Published : Sep 03, 2018, 04:45 PM ISTUpdated : Sep 09, 2018, 07:40 PM IST
கள்ளக்காதல் விவகாரம்... அபிராமி குறித்து அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்!

சுருக்கம்

கள்ளகாதலுக்காக பெற்ற குழந்தைகளையே கொலை செய்த தாய் அபிராமி போலீசில் பகீர் வாக்குமூலத்தை அளித்துள்ளார். கணவர் விஜயோடு 8 ஆண்டுகள் குடும்பம் நடத்தியபோதிலும், சுந்தரத்துடனான 2 மாத கள்ளக்காதலை தன்னால் விட முடியவில்லை என்று கூறியுள்ளார்.

கள்ளகாதலுக்காக பெற்ற குழந்தைகளையே கொலை செய்த தாய் அபிராமி போலீசில் பகீர் வாக்குமூலத்தை அளித்துள்ளார். கணவர் விஜயோடு 8 ஆண்டுகள் குடும்பம் நடத்தியபோதிலும், சுந்தரத்துடனான 2 மாத கள்ளக்காதலை தன்னால் விட முடியவில்லை என்பதால், இதற்கு என்ன வழி? என்று யோசித்ததாகவும், அப்போது, கணவர், குழந்தைகளை கொன்றுவிட்டால் நாம் எந்த சுதந்திரமாக இருக்கலாம் என்று சுந்தரம் கூறியதாகவும், அபிராமி கூறியுள்ளார்.

 

கடந்த 30-ம் தேதியே கணவர் மற்றும் குழந்தையை கொலை திட்டமிட்டுள்ளார். அன்று இரவே 3 பேருக்கும் வி‌ஷ கலந்த பாலை கொடுத்துள்ளார். யாரும் மறுநாள் காலையில் எழுந்திருக்கமாட்டார்கள் என்று நினைத்த அபிராமி, 31-ம் தேதி காலையில் கணவர் விஜயும், மகன் அஜயும் எழுந்து விட்டனர். இதை கண்டு அதிர்ச்சி்யடைந்ததாக அபிராமி கூறியுள்ளார். 

ஆனால் மகள் கார்னிகா இரவே உயிரிழந்திருக்கலாம் வாக்குமூலத்தில் தெரிவித்தாள். கணவர் விஜய் எப்போது வேலைக்கு செல்லும் முன் மகளுக்கு முத்தம் கொடுத்துவிட்டு செல்வார். ஆனால் அவர் ரூமுக்கு செல்ல முயன்ற போது, குழந்தை அசந்து தூங்குகிறாள் என்று தான் கூற, அதை நம்பி விஜயும் வேலைக்கு சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். 

பிறகு மறுநாள் மீண்டும் மகன் அஜய்க்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். பின்னர் பெற்ற மகனையே கழுத்தை நெரித்து கொன்றதாகவும் அபிராமி போலீசில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!