அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்ட கடைசியில் இது தான் கதி.. மர்ம உறுப்பை வெட்டி இளைஞர் படுகொலை.!

Published : Mar 22, 2022, 08:54 AM IST
அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்ட கடைசியில் இது தான் கதி..  மர்ம உறுப்பை வெட்டி இளைஞர் படுகொலை.!

சுருக்கம்

பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடியன்பேட்டை ஏரிக்கரை பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பதா அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது மர்ம உறுப்பு உள்பட பல இடங்களில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தது தெரியவந்தது. 

வேளச்சேரி அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் இளைஞரின் மர்ம உறுப்பை வெட்டி வாலிபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

செல்போன் சுவிட்ச் ஆப்

சென்னை வேளச்சேரி அடுத்த ஜல்லடியன்பேட்டை நெசவாளர் நகர் வைத்தியலிங்கம் தெருவை சேர்ந்தவர் நரேஷ் (29). ஏசி மெக்கானிக். நேற்று  முன்தினம் இரவு வெளியில் சென்ற நரேஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர்கள் வீடு, நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலியுடன் கணவர் உல்லாசம்.. இரண்டு மகன்களுடன் மனைவி செய்த பகீர் காரியம்.!

மர்ம உறுப்பை வெட்டி வாலிபர் படுகொலை

இந்நிலையில், பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடியன்பேட்டை ஏரிக்கரை பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பதா அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது மர்ம உறுப்பு உள்பட பல இடங்களில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தது தெரியவந்தது. 

 நீதிமன்றத்தில் 4 பேர் சரண்

கொலை செய்யப்பட்டவர் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கொலை செய்யப்பட்டது காணாமல் போன நரேஷ் என்பது உறுதியானது. அதே பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன் (28) என்பவரின் மனைவிக்கும், கடந்த ஒரு வருடமாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.  இதுபற்றி அறிந்த அருண்பாண்டியன் பலமுறை நரேஷை கண்டித்துள்ளார். ஆனால், எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார்.

இதையும் படிங்க;- பொண்டாட்டி பார்த்துக்கோ சொல்லிட்டு போனது ஒரு குத்தமா? விஷயம் தெரிந்து பாரினில் இருந்து பறந்து வந்த கணவர் கொலை

இதனால் ஆத்திரமடைந்த அருண்பாண்டியன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நரேஷை கடத்தி கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், அருண்பாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள்  சஞ்ஜய் (27), அருண் (27), திலிப் (எ) அஜித் (27) ஆகியோர் நேற்று மாலை எழும்பூர்  நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!