கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை கொன்று வீட்டுக்குள் புதைத்த காமவெறி பிடித்த தாய்.. 6 ஆண்டுக்கு பிறகு அம்பலம்..!

Published : Jun 25, 2020, 05:48 PM IST
கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை கொன்று வீட்டுக்குள் புதைத்த காமவெறி பிடித்த தாய்.. 6 ஆண்டுக்கு பிறகு அம்பலம்..!

சுருக்கம்

திருப்பூரில் தாயின் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் 6 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூரில் தாயின் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் 6 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல் காசர். இவருடைய மனைவி சகாயராணி. இவர்களுடைய மகள் எஸ்தர்பேபி (39). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அதன்பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எஸ்தர்பேபி தனது கணவரை விட்டு பிரிந்து 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, வீரபாண்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

இந்நிலையில் சகாயராணிக்கும், அதே பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளத்தொடர்பாக மாறியது. இது எஸ்தர் பேபிக்கு தெரியவந்தது. இதையடுத்து தனது தாயை எஸ்தர் பேபி கண்டித்தார். ஆனாலும், சகாயராணி தனது கள்ளத்தொடர்பை விடவில்லை. பின்னர், கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி முதல் எஸ்தர் பேபியை காணவில்லை. இதையடுத்து தனது மகளை காணவில்லை என்று 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி வீரபாண்டி காவல் நிலையத்தில் சகாயராணி புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்தர் பேபியை தேடி வந்தனர். ஆனாலும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் சென்னையில் வசித்து வரும் சகாயராணியின் தம்பி சேவியர் அருண் என்பவரை கொலை வழக்கு ஒன்றில் கைது செய்த பள்ளிக்கரணை போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதை அறிந்த எஸ்தர் பேபியின் தந்தை அப்துல் காசர், பள்ளிக்கரணை சென்று, சேவியர் அருண் வீரபாண்டி வந்த பிறகுதான் தனது மகள் காணாமல் போனதாகவும், இதனால் அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகார் மனு கொடுத்தார். இதனையடுத்து வீரபாண்டி போலீசார், சேவியர் அருணை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் சேவியர் அருண், சகாயராணி மற்றும் பாக்கியராஜ் ஆகிய மூவரும் சேர்ந்து எஸ்தர் பேபியை கத்தியால் குத்தி கொலை செய்து அவர் குடியிருந்த வீட்டிற்கு உள்ளேயே புதைத்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து சேவியர் அருண் மற்றும் சகாயராணி, பாக்கியராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீரபாண்டி அழைத்து வந்து எஸ்தர்பேபியை கொன்று புதைத்த இடத்தை காண்பித்தனர். உடல் புதைக்கப்பட்டு 6 வருடங்களானதால் எலும்பு கூடுகள் மட்டுமே இருந்தன. அவற்றை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்த வழக்கில் சகாயராணியின் கள்ளக்காதலன் பாக்கியராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!