அண்ணியுடன் கள்ளத்தொடர்பில் நண்பன்... கதற கதற கொழுந்தன் நடத்திய சம்பவம்..!

Published : Sep 19, 2019, 02:42 PM ISTUpdated : Sep 19, 2019, 02:46 PM IST
அண்ணியுடன் கள்ளத்தொடர்பில் நண்பன்... கதற கதற கொழுந்தன் நடத்திய சம்பவம்..!

சுருக்கம்

நாமக்கல் அருகே தலை துண்டித்து தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

நாமக்கல் அருகே தலை துண்டித்து தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள நாட்டாகவுண்டன்புதூர் காவிரி ஆற்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைதத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது குறித்து விசாரித்து வந்தனர். 

இந்நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் குமாரபாளையத்தை சேர்ந்த தொழிலாளி சின்ராஜ் (38) என்பதும், இவரது நண்பர் குமாரபாளையத்தை சேர்ந்த கூள குமார் (42) என்பவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது குடித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில் கூள குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது, சின்ராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசாரிடம் அவர் பல திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அதில், சின்ராஜ் எனது அண்ணியுடன் தொடர்பு வைத்திருந்தார். இதனால் அவரை கடந்த 11-ம் தேதி பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலிக்கு கூட்டிச்சென்று மது வாங்கி கொடுத்தேன். பின்னர் எனது அண்ணியுடன் உள்ள தொடர்பை விட்டு விடும்படி கூறினேன். அவர் மறுக்கவே எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரத்தில் நான் அவரது வயிற்றில் கத்தியால் குத்தி தலையை துண்டித்தேன். இதனையடுத்து, அவரது உடலை ஆற்றில் வீசினேன். தலையை தனியாக பிளாஸ்டிக் பையில் போட்டு அதையும் ஆற்றில் வீசினேன். பின்னர் ஒன்றும் தெரியாதது போல இருந்து கொண்டேன். போலீசார் என்னை பிடித்து விட்டனர் என்றார். 

PREV
click me!

Recommended Stories

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!
கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்