நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி மனைவியுடன் உல்லாசம்... கடுப்பில் கணவர் செய்த காரியம்..!

Published : Dec 19, 2020, 03:40 PM IST
நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி மனைவியுடன் உல்லாசம்... கடுப்பில் கணவர் செய்த காரியம்..!

சுருக்கம்

ஆந்திராவில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த இளைஞர் கொடூரமான முறையில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திராவில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த இளைஞர் கொடூரமான முறையில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி ஓங்கோவில் உள்ள ஒரு தனியார் ஷாப்பிங் மாலில் வேலை செய்து வருகிறார். இதே ஷாப்பிங் மாலில் தனுஷ் என்பவரும் வேலை செய்கிறார். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

அடிக்கடி இவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். காலபோக்கில் இந்த தகவல் கணவர் ஜோசப்பிற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தனது மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும், கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. இதனால், கடும் ஆத்திரமடைந்த ஜோசப் தனது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனான தனுசை ஓங்கோலில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வருமாறு தனிதனியாக அழைத்துள்ளார். 

அதன்படி தனித்தனியாக அங்கு வந்தனர். அப்போது, ஜோசப் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனுஷை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, ஜோசப் ஓங்கோல் நகர காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தனுஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த ஜோசப்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சார், எமர்ஜென்சி... கடிதம் எழுதி வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட முன்னாள் போலீஸ் ஐஜி..! பகீர் பின்னணி..!
அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!