வாங்கிய கடனுக்காக மனைவியுடன் உல்லாசமாக இருந்த லாரி அதிபர்.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நடந்த பயங்கரம்.!

Published : Dec 16, 2021, 09:06 AM IST
வாங்கிய கடனுக்காக மனைவியுடன் உல்லாசமாக இருந்த லாரி அதிபர்.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நடந்த பயங்கரம்.!

சுருக்கம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வன்னிய அடிகளார் நகரை சேர்ந்த லாரி அதிபர் வெங்கடேசன்(35). கடந்த 11ம் தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

முதலில் கடனை திருப்பி கேட்டதால் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் கள்ளக்காதல் விவகாரத்தில் வெங்கடேசன் கொலை செய்யப்பட்டது  தெரியவந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வன்னிய அடிகளார் நகரை சேர்ந்த லாரி அதிபர் வெங்கடேசன்(35). கடந்த 11ம் தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், சங்கர் வெங்கடேசனை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, சங்கர் (45), அவரது மனைவி பாக்கியலட்சுமி (40) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது. லாரி அதிபரான வெங்கடேசன் மெக்கானிக்காக இருந்த சின்ன வேப்பம்பட்டை சேர்ந்த சங்கருக்கு 10 லட்சம் ரூபாயை 2017ம் ஆண்டு கடனாக கொடுத்தார். வட்டியும், அசலையும் சங்கர் கொடுக்கவில்லை. கடனை வாங்குவதற்காக, சங்கர் வீட்டுக்கு வெங்கடேசன் அடிக்கடி சென்றுள்ளார். வெங்கடேசன் வருவதை பார்த்ததும் வீட்டு பின்பக்க கதவு வழியாக சங்கர் தப்பிச் சென்று விடுவது வழக்கமாக கொண்டிருந்தார். 

இதனால், வெங்கடேசன் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதால் பாக்கியலட்சுமியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. சங்கர் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கணவர் சங்கருக்கு தெரியவந்தது. ஆத்திரமடைந்த சங்கர் வெங்கடேசனிடம் இது தொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு வாங்கிய கடனை திருப்பி கொடுக்கும் வரை கள்ள தொடர்பு தொடரும் என வெங்கடேசன் கூறியுள்ளார். 

கடந்த 11ம் தேதி சங்கர் வீட்டுக்கு சென்ற வெங்கடேசன் பாக்கியலட்சுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த சங்கர், மனைவியுடன் வெங்கடேசன் உல்லாசமாக இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்தார். இதனையடுத்து, வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து வெங்கடேசனை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதனால் பாக்கியலட்சுமியை அழைத்துக் கொண்டு சங்கர் பெங்களூருக்கு தப்பிச் செல்ல முயன்ற போது, ஓசூரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆரம்பத்தில், கடனை திருப்பி கேட்டதால் வெங்கடேசன் கொலை செய்யப்பட்டதாக தகவல் வந்தது. ஆனால், இரண்டு பேரை கைது செய்த பிறகு தான், கள்ளக்காதலால் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி