கல்லூரி மாணவியை வலையில் வீழ்த்திய இளைஞர்கள்... வீடியோவை காட்டி பலாத்காகரம்..!

Published : Dec 14, 2021, 05:50 PM IST
கல்லூரி மாணவியை வலையில் வீழ்த்திய இளைஞர்கள்... வீடியோவை காட்டி பலாத்காகரம்..!

சுருக்கம்

பாதிக்கப்பட்ட மாணவி, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கு, பண உதவி செய்வது போல் பழகி, அவரை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து பலாத்காரம் செய்த சம்பவம் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் அருமனை அடுத்த மேல்பாலை குழியோல்விளை பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகன் ராணுவ வீரரான சஜித், மேல்பாலையை சேர்ந்த ஜாண் பிரிட்டோ, மேல்பாலை கிரீஷ், லிபின் ஜாண் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் சஜித் ராணுவ வீரர் ஆவார். இவர் தான் மாணவியிடம் பழகி வீடியோ பதிவு செய்து பலாத்காரம் செய்ததாக மாணவி புகாரில் கூறி உள்ளார். மேலும் ஜாண் பிரிட்டோ, மாணவியிடம் நகையை வாங்கி பணம் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். கிரிஷ், லிபின்ஜாண் இருவரும், மாணவியின் ஆபாச வீடியோவை காட்டி தங்களது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் கிரிஷும் ராணுவ வீரர்.

இந்த வழக்கில் விசாரணை நடத்த 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் தற்போது ஜாண் பிரிட்டோ, லிபின் ஜாண் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வீடியோவை வேறு எங்காவது பார்வேர்டு செய்தார்களா? என்பது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். ராணுவ வீரர்களான சஜித், கிரிஷ் ஆகிய இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!