அடிப்பாவி... கள்ளக்காதலனுக்காக பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற காமவெறி பிடித்த தாய்..!

Published : Aug 16, 2021, 06:55 PM IST
அடிப்பாவி... கள்ளக்காதலனுக்காக பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற காமவெறி பிடித்த தாய்..!

சுருக்கம்

உல்லாசத்திற்கு குழந்தை இடையூறாக இருந்ததால் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று விட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து, குழந்தையை கொன்ற தாய் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். 

பொள்ளாச்சி அருகே  3 வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள தம்மம்பதி கல்லாங்குத்து மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேசர்ந்தவர் மணிகண்டன் (22). கூலி தொழிலாளி. இவரது மனைவி சரோஜினி (21). இவர்களுக்கு நிவன்யாஸ்‌ரீ என்ற 3 வயது மகள் இருந்தார். மணிகண்டன் கடந்த 14ம் தேதி காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் அவரது 3 வயது பெண்குழந்தைககு உடல்நலம் சரியில்லை என்று கூறி சரோஜினி வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தையை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், குழந்தை உயிரிழப்பில் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் ஆனைமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் தாய் சரோஜினியிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து, குழந்தையின் தந்தை மணிகண்டன் ஆனைமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். மேலும், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் குழந்தையின் கழுத்தில் காயம் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சரோஜினியிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்  மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த பொம்மன்(23) என்ற வாலிபருடன் சரோஜினிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், உல்லாசத்திற்கு குழந்தை இடையூறாக இருந்ததால் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று விட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து, குழந்தையை கொன்ற தாய் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

கணவர் கண் முன்னே கதறிய பெண்.. விடாமல் கூட்டாக சேர்ந்து குதறிய சிறுவர்கள் உட்பட 3 பேர்
சிதறி கிடந்த பூ.. கர்சீப்.. தாயின் கதையை முடித்துவிட்டு ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய மகள், மருமகள்.. நடந்தது என்ன?