ஒரே நேரத்தில் இருவருடன் கள்ளக்காதல்... 26 வயது பெண்ணால் ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த பரிதாபம்..!

Published : May 13, 2021, 06:56 PM IST
ஒரே நேரத்தில் இருவருடன் கள்ளக்காதல்... 26 வயது பெண்ணால் ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த பரிதாபம்..!

சுருக்கம்

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிய சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிய சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை தாம்பரம் அருகே சேலையூர், எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (36). ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 9ம் தேதி இரவு தனது வீட்டின்  அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் கோபாலகிருஷ்ணனை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். 

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபாலகிருஷ்ணனை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த 3 பேர் நேற்று  சேலையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் சேலையூர், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ராஜசேகர் (27), திருவஞ்சேரியைச் சேர்ந்த மார்டின் (22), மப்பேடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (19) எனத் தெரியவந்தது.

 மேலும், கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த 26 வயதான பெண்ணுடன் ராஜசேகருக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக அப்பெண்ணுடன் கோபாலகிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அப்பெண் ராஜசேகருடன் தொடர்பை துண்டித்துக் கொண்டார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கோபாலகிருஷ்ணனை தனது நண்பர்கள் மார்டின், ரஞ்சித்குமாருடன் சேர்ந்து வெட்டி கொல்ல முயன்றதாக ராஜசேகர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து, 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!