கள்ளக்காதல் வெளியே தெரிந்ததால் அதிர்ச்சி !! தற்கொலை செய்து கொண்ட இளம் ஜோடிகள் !!

Published : Sep 30, 2019, 08:22 PM IST
கள்ளக்காதல் வெளியே தெரிந்ததால் அதிர்ச்சி !!  தற்கொலை செய்து கொண்ட இளம் ஜோடிகள் !!

சுருக்கம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் கள்ளக்காதல் ஜோடி பிணமாக கிடந்தனர். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா தோட்டக்காட்டுக்கர என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள மேல்தளத்தில் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. 

இதுபற்றி அங்கு வசிப்பவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த வீட்டில் வாலிபர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்கள் இறந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என்பதால் அவர்களது உடல் அழுகிய நிலையில் கிடந்தது.

பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த வாலிபரும், இளம்பெண்ணும் அதே குடியிருப்பில் வசிப்பவர்கள் என்பது தெரியவந்தது.
இறந்து கிடந்த வாலிபரின் பெயர் ரமேஷ்.  இவர் செல்போன் நிறுவனத்தில் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. இளம்பெண்ணின் பெயர் மோனிஷா .  அவருக்கு திருமணமாகி சதீஷ் என்ற கணவரும், குழந்தைகளும் உள்ளனர்.

ரமேஷ் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்திலும், மோனிஷா கணவருடன் கீழ் தளத்திலும் வசித்து வந்தனர். சதீஷ் சினிமா எடிட்டிங் தொடர்பான ஸ்டூடியோவில் பணியாற்றி வந்தார்.

ரமேசுக்கும், மோனிஷாவுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து  வந்தது. இதையடுத்து இந்த கள்ளத் தொடர்பு மோனிஷாவின் கணவருக்கு தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்த அவரும் ரமேசும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்ததது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அடங்காத 26 வயது அண்ணி சாந்தி.. தீராத வெறியில் இருந்த கொழுந்தன்.. இறுதியில் நடந்த அலறல் சத்தம்.!
அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?