அப்போ சமாச்சார வீடியோவில் இருக்கறது யாரு? நாஞ்சில் சம்பத் சொல்லும் விளக்கம்...

Published : Sep 30, 2019, 02:51 PM IST
அப்போ சமாச்சார வீடியோவில் இருக்கறது யாரு? நாஞ்சில் சம்பத் சொல்லும் விளக்கம்...

சுருக்கம்

சமூக வலைத்தளங்கள் மூலம் தன் பெயரை கெடுக்க உல்லாச வீடியோ மூலம் வதந்தி பரப்பி வருவதாக  விளக்கம் அளித்துள்ளார்.  

நாஞ்சில் சம்பத்  ஆபாச வீடியோ ஒன்று வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. அந்த வீடியோவில் ஒரு இளம் பெண்ணுடன் மது குடிப்பது போன்றும், அந்த பெண்ணை அந்த நபர் கட்டி அணைக்கும் காட்சிகளும் 1 நிமிடம் 12 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ இணையத்தை சூடாக்கியது.

இந்த காட்சிகளில் காணப்படும் நபர் நாஞ்சில் சம்பத் என்று செய்திகளும் பரப்பப்பட்டது. இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சிகள் பற்றி நாஞ்சில் சம்பத்திடம் கேட்டதற்கு; சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சிகள் பற்றி நண்பர்கள் சிலர் சொன்னார்கள். ஆனால் அந்த காட்சிகளை நான் பார்க்கவில்லை. அரசியலில் நேர்மையும், தூய்மையும் கொண்டவன் நான். நான் அப்படிப்பட்டவன் இல்லை. புலி வேட்டைக்கு புறப்பட்ட நான் எலிகளை பொருட்படுத்துவதில்லை. யார் என்ன சொன்னாலும், எனக்கு அதுபற்றி கவலையில்லை. யார் தூண்டுதலால், இதை யார் செய்தார்? என்பதை கண்டுபிடிக்கவும் விரும்பவில்லை. என் பெயரை கெடுக்க யாரோ அவதூறு பரப்புகிறார்கள். அந்த காட்சிகளை பரப்பியவர் பற்றி புகார் கொடுத்து அவர்களை பெரிய ஆளாக்க விரும்பவில்லை. என்னை பற்றி அவதூறு பரப்புவதன் மூலம் அவருக்கு மகிழ்ச்சி கிடைத்தால், கிடைத்து விட்டு போகட்டும். நான் ஒன்றும் நினைக்கவில்லை. எந்தவிதமான தவறுகளும் என் வாழ்க்கையில் இல்லை என் பயணம் தொடரும் எனக் கூறியுள்ளார்.

அதேபோல சமூக வலைதளங்களில், அது நாஞ்சில் சம்பத் இல்லை, வழக்கம்போல ஃபேக்  வீடியோ தானாம்! நா.ச மேலே அப்படியென்ன வெறுப்புன்னு தெரியலை? டிடிவி குரூப்பும் வெறி கொண்டு பரப்பிட்டு இருக்காங்க. ஆனா பாருங்க வெளியாகி பட்டையை கிளப்பிகிட்டு இருக்கறது வெறும் ட்ரைலர் தானாம்,  முழு படமும் ஹெச்டி குவாலிட்டியில் ரிலீஸ் ஆகும்  என அமமுகவினர் சொல்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

கணவர் கண் முன்னே கதறிய பெண்.. விடாமல் கூட்டாக சேர்ந்து குதறிய சிறுவர்கள் உட்பட 3 பேர்
சிதறி கிடந்த பூ.. கர்சீப்.. தாயின் கதையை முடித்துவிட்டு ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய மகள், மருமகள்.. நடந்தது என்ன?