சுனிதாவுக்கு, கணவர் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்த மலையரசன் (22) என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது முத்துராமலிங்கத்துக்கு தெரியவே, மனைவியை கண்டித்தார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்காதலை கண்டித்த மின்வாரிய ஊழியரை கட்டையால் தாக்கி கொன்றுவிட்டு விபத்தில் உயிரிழந்தது போல நாடகமாடிய மனைவி உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே எம்.புளியங்குளத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (45). மின்வாரிய ஊழியர். இவர், நேற்று முன்தினம் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க;- மச்சினிச்சியை மடக்கிய அக்கா புருஷன்.. லாட்ஜில் ரூம் போட்டு செய்த பகீர் சம்பவம்.. அதிர்ந்துபோன ஊழியர்.!
இந்நிலையில் அவரது பெரியப்பா மகன் முருகன் என்பவர் முத்துராமலிங்கத்தின் இறப்பில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முத்துராமலிங்கத்தை யாரேனும் கொலை செய்திருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதையடுத்து போலீசார் சந்தேகத்தின்பேரில், முத்துராமலிங்கத்தின் மனைவி சுனிதாவிடம் (43) விசாரணை நடத்தினர். இதில், சுனிதா கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாரின் மனைவி என்பதும், 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர் குழந்தை அன்னபூரணியுடன் வந்து முத்துராமலிங்கத்துடன் குடும்பம் நடத்தியதும் தெரிய வந்தது.
முத்துராமலிங்கம் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். ஓராண்டுக்கு முன், முத்துராமலிங்கத்திற்கு மின்வாரியத்தில் வேலை கிடைத்தது. மதுரை அரசரடியில் உள்ள அலுவலகத்தில் பயிற்சி பெற்று வந்தார். சமயம் கிடைக்கும்போது வீட்டிற்கு வந்து சென்றார். இந்நிலையில், சுனிதாவுக்கு, கணவர் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்த மலையரசன் (22) என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது முத்துராமலிங்கத்துக்கு தெரியவே, மனைவியை கண்டித்தார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க;- பட்டா மாறுதலுக்கு வந்த திருமணமான பெண்ணை மிரட்டி மகாபலிபுரத்தில் ரூம் போட்டு பலாத்காரம் செய்த விஏஓ..!
இதையடுத்து சுனிதா தூண்டுதலின்பேரில், மலையரசன் தனது நண்பர் சிவா (23)வுடன் சேர்ந்து, கடந்த 1ம் தேதி இரவு வீட்டிற்கு வெளியில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த முத்துராமலிங்கத்தை கட்டையால் அடித்து கொலை செய்தனர். பின்னர் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து காரேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் போட்டு விபத்தில் இறந்ததை போன்று நாடகமாடி உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க;- கள்ளக்காதலன் உட்பட 3 பேருக்கு பெற்ற மகளை விருந்தாக்கிய கொடூர தாய்.. வெளியான அதிர்ச்சி சம்பவம்..!