என்னோட மனைவியை உஷார் செஞ்சிட்டியா நீ... உன்ன சும்மா விட மாட்டேன் டா.. பீகார் இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்.!

By vinoth kumar  |  First Published Feb 20, 2023, 3:13 PM IST

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பவன் யாதவ்(27). திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் குடும்பத்துடன் தங்கி  பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் உபேந்தரதாரி(50)  குடும்பத்துடன் தங்கி அதே பகுதியில் வசித்து வந்துள்ளார்.


கள்ளக்காதல் விவகாரத்தில் பீகார் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக  ஜார்கண்ட் மாநில தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர். 
 
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பவன் யாதவ்(27). திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் குடும்பத்துடன் தங்கி  பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் உபேந்தரதாரி(50)  குடும்பத்துடன் தங்கி அதே பகுதியில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், உபேந்தரதாரி  மனைவி சித்ராதேவியுடன் பவன் யாதவிற்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக விசாரிக்க  உபேந்தரதாரி பவன் யாதவ் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில்  ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரடைந்த உபேந்தரதாரி தான் கையில் வைத்திருந்த அரிவாளால் பவன் யாதவை தலை, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டார். 

Tap to resize

Latest Videos

இதில், படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ததீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பவன் யாதவ் உடலை பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்து விட்டு  தப்பி சென்ற ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் உபேந்தரதாரியை போலீசார் தேடி வருகின்றனர். 

click me!