ஊரடங்கில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடையூறு... பெற்ற மகனை துடிதுடிக்க கொன்ற காம கொடூர தாய்..!

Published : Apr 20, 2020, 04:35 PM ISTUpdated : Apr 20, 2020, 04:37 PM IST
ஊரடங்கில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடையூறு... பெற்ற மகனை துடிதுடிக்க கொன்ற காம கொடூர தாய்..!

சுருக்கம்

கால்டாக்சி ஓட்டுநனர் ராஜதுரை (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால், வீட்டில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ராஜதுரை திவ்யா வீட்டிலே தங்கியிருந்தார். 

கோவையில் 6 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருப்பதற்காக பெற்ற தாயே மகனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் அருண் (35). இவருடைய மனைவி திவ்யா (30). இவர்களுக்கு அபிஷேக் (6) மற்றும் 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அருண் கால்டாக்சி ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், திவ்யா கணவரை பிரிந்து 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோவை கோவில்மேட்டில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். 

பின்னர், தனியார் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சென்று வந்தார். அப்போது,  கால்டாக்சி ஓட்டுநனர் ராஜதுரை (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால், வீட்டில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ராஜதுரை திவ்யா வீட்டிலே தங்கியிருந்தார். 

அப்போது ராஜதுரையும், திவ்யாவும் உல்லாசமாக இருப்பதற்கு சிறுவன் இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடுப்பான இருவரும் சிறுவனை  பிரம்பால் கடுமையாக தாக்கியுள்ளனர். மருத்துவனைக்கு கொண்டு சென்றால் நாம் சிக்கிவிடுவோம்  என்பதால் மருந்துக்கடையில் மருத்துகள் வாங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, சிறுவனின் உடல்நிலை ரொம்ப மோசமடைந்தால் ஆம்புலன்ஸைஅழைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அபிஷேக்கின் உடல் முழுக்க காயங்கள் இருந்த நிலையில் பரிசோதனை செய்து பார்த்த போது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தங்களது கள்ளக்காதலுக்கு சிறுவன் இடையூறாக இருந்ததால் அவனை அடித்துள்ளனர். இதில், சிறுவன் உயிரிழக்கவே மாடியில் இருந்து கீழே விழுந்ததாகக் கூறி நாடகம் ஆடியுள்ளனர். இதனையடுத்து, சிறுவனின் தாய் திவ்யா கள்ளக்காதலன் ராஜதுரை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி