உல்லாசத்திற்கு மறுப்பு... காமவெறியில் உயிருடன் தீ வைத்து எரித்த கள்ளக்காதலன்.. அனாதையான 3 குழந்தைகள்..!

Published : May 26, 2020, 12:21 PM IST
உல்லாசத்திற்கு மறுப்பு... காமவெறியில் உயிருடன் தீ வைத்து எரித்த கள்ளக்காதலன்.. அனாதையான 3 குழந்தைகள்..!

சுருக்கம்

சேலம் அருகே 3 குழந்தைகளின் தாயை கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

சேலம் அருகே 3 குழந்தைகளின் தாயை கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் அய்யம்புதூரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பார்வதி (35). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். முருகன் இறந்துவிட்டார். நங்கவள்ளி அருகே உள்ள மசக்காளியூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவருடன் பார்வதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலமாக மாறியது. இதனையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் பார்வதியுடன் உல்லாசமாக இருப்பதற்காக செந்தில் குமார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, செந்தில்குமார் ஆசைக்கு இணங்க பார்வதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பார்வதி தற்கொலை செய்யப்போவதாக கூறி தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றியதாகவும், அப்போது செந்தில்குமார் பார்வதி மீது தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதில், அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர், அவரை மீட்டு சேலம் அரசு  மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கள்ளக்காதலன் செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

தனியாக செல்லும் பொண்ணுங்க தான் டார்கெட்.. தொடக்கூடாத இடத்தில் தொட்டு சிக்கிய 27 வயது இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி
சார் நீங்களும் டீச்சரும்.. செல்போனில் பலான வேலை பார்த்த போட்டோ என்கிட்ட இருக்கு! ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய மாணவர்கள்