கிணற்றில் 9 பேர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்.. கள்ளக்காதல் விவகாரத்தில் படுகொலை.. வெளியானது பரபரப்பு தகவல்

By vinoth kumarFirst Published May 25, 2020, 6:43 PM IST
Highlights

தெலுங்கானாவில் கிணற்றில் 9 பேர் சடலங்கள் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் ஒரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியு்ளது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தெலுங்கானாவில் கிணற்றில் 9 பேர் சடலங்கள் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் ஒரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியு்ளது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தின் கோரே குந்தா என்ற கிராமத்தில் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. மேற்குவங்கம் மற்றும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலையில் அதிகளவில் பணியாற்றி வந்தனர்.அவர்களில் ஒருவர்தான் மேற்குவங்கத்தைச் சேர்ந்த மசூத். கரிமாபாத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், ஊரடங்கு காரணமாக தொழிற்சாலை மூடப்பட்டதால், வாடகை கொடுக்க வழியின்றி அதன் உரிமையாளருக்கு சொந்தமான குடோனில் குடியேறியுள்ளார். குடோனில் வசித்து வந்த மசூத், குடும்பத்துடன் காணாமல் போனதாக அதன் உரிமையாளர் சந்தோஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மசூத் அவரின் குடும்பத்தினரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை தொழிற்சாலை அருகே உள்ள கிணற்றில் சில சடலங்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அங்கு சென்ற போலீசார், தண்ணீரில் மிதந்த 4 சடலங்களை கைப்பற்றினர். விசாரணையில் அவர்கள் தொழிற்சாலையில் பணிபுரிந்த மசூத், அவரது மனைவி நிஷா, கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த அவரது மகள் புஸ்ரா, அவரது மூன்று வயது மகன் என்பது தெரியவந்தது.

வெள்ளிக்கிழமை அதே கிணற்றில் மேலும் 5 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மசூத் மகன் சபாக், பீகாரை சேர்ந்த தொழிலாளிகள் ஸ்ரீராம், ஷாம், திரிபுராவை சேர்ந்த ஷகீல் அகமது ஆகியோரின் உடல்களையும் அதே கிணற்றில் இருந்நு போலீசார் கைப்பற்றினர். ஒரே கிணற்றில் இருந்து அடுத்தடுத்து 9 சடலங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்துபோன 9 பேரும் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார்களா? அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

பாழடைந்த கிணற்றில் 9 பேரும் குதித்து தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை என்பதால், கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.  அதன்படி, கிணற்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டதன் முதல் நாள், மசூத்தின் மகனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு சஞ்சய் குமார் ஷா என்ற பீகாரைச் சேர்ந்தவர் வந்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரை தேடிக்கண்டுபிடித்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், சஞ்சய் குமார் ஷா உள்ளிட்ட 4 பேர் கொலையை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.மசூத்தின் மகளான உயிரிழந்த 22 வயது புர்ஷாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். புர்ஷா உடன் சஞ்சய் குமார் ஷாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ஆனால், இந்த தொடர்பு திடீரென புர்ஷாவால் துண்டிக்கப்பட்ட நிலையில், மசூத் குடும்பத்தினர் மீது சஞ்சய் குமார்  கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார். 

குடும்பத்தில் உள்ள அனைவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்த சஞ்சய் குமார், தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, பிறந்தநாள் நிகழ்ச்சியில் விஷம் கலந்த குளிர்பானத்தை 9 பேருக்கும் கொடுக்க, அதனைக் குடித்த அவர்கள் மயங்கி சரிந்துள்ளனர். பின்னர், உடல்களைக் தூக்கி அருகில் உள்ள கிணற்றில் போட்டுள்ளனர். இதனையடுத்து, 4 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

click me!