வேறொருவருடன் கள்ளத்தொடர்பு... 2வது மனைவியை ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க கொலை செய்த கணவர்..!

Published : Jul 22, 2020, 05:08 PM IST
வேறொருவருடன் கள்ளத்தொடர்பு... 2வது மனைவியை ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க கொலை செய்த கணவர்..!

சுருக்கம்

சென்னையில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் 2வது மனைவியை துடிதுடிக்க கணவர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் 2வது மனைவியை துடிதுடிக்க கணவர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் 17-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சார்லஸ் ராஜ்குமார் (31). இவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு பவித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஒரே வருடத்தில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். தனியாக வசித்து வந்த சார்லஸ் ராஜ்குமார், கடந்த ஆண்டு வியாசர்பாடியில் வசித்து வரும் ரமணி (35) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். ரமணிக்கும், அதே பகுதியை சேர்ந்த சார்லி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சார்லஸ் ராஜ்குமார், இதுபற்றி தனது 2-வது மனைவி ரமணியிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ரமணி கடந்த வாரம் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று சார்லஸ் ராஜ்குமார், மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தார்.

பின்னர் வீட்டில் இருந்த சார்லஸ் ராஜ்குமார், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி ரமணியின் கழுத்தில் ஆத்திரம் தீர சரமாரியாக குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, கத்தியுடன்  எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை