ஒரே நேரத்தில் 2 கள்ளக் காதலன்களுடன் உல்லாசம்... அடங்காத 48 வயது ஆன்ட்டி.. நடுகாட்டில் நடந்த பயங்கரம்.

Published : Sep 13, 2021, 11:31 AM ISTUpdated : Sep 13, 2021, 11:34 AM IST
ஒரே நேரத்தில் 2 கள்ளக் காதலன்களுடன் உல்லாசம்... அடங்காத 48 வயது ஆன்ட்டி..  நடுகாட்டில் நடந்த பயங்கரம்.

சுருக்கம்

இருவரும் அடிக்கடி பல இடங்களில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்நிலையில் தனது கள்ளக்காதலியை அடிக்கடி சந்திக்கும் வகையில் எல்லாரெட்டி குடாவில் தனியாக அறை எடுத்து அசோக்குமார் தங்கினார். 

கணவன் இருக்கும்போதே ஒரே நேரத்தில் இரண்டு கள்ளக்காதலனுடன் தொடர்பில் இருந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத் நகருக்கு அருகேதான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் 48 வயது பெண், தனது கணவர் மற்றும்  மகன், பேத்தியுடன் காப்ரா வாம்பு குடாவில்  தங்கியிருந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்த போது உடன் பணியாற்றிய மாரோடு பள்ளியை சேர்ந்த அசோக் (36) என்பவரிடம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் அடிக்கடி பல இடங்களில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்நிலையில் தனது கள்ளக்காதலியை அடிக்கடி சந்திக்கும் வகையில் எல்லாரெட்டி குடாவில் தனியாக அறை எடுத்து அசோக்குமார் தங்கினார். இந்நிலையில் அசோக்குமாரின் கள்ளக்காதல் விவகாரம் அவரது மனைவிக்கு தெரியவந்தது, இதனால் இருவருக்கும் இடையே அடிதடி தகராறு ஏற்பட்டு கள்ளக்காதலி அசோக்குமாரால் சரிவர சந்திக்க முடியாமல் போனது. இந்நிலையில் அசோக்குமாரின் கள்ளகாதலி வேறொரு ஆணுடன் உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இதை கண்டு ஆத்திரமடைந்த அசோக்குமார், இந்த மாதம் 5-ஆம் தேதி, தனது அறைக்கு வருமாறு தனது கள்ளக்காதலியை அழைத்தார். அந்தப் பெண்ணும் அசோக் குமாரை அவரது அறைக்கு சென்று சந்தித்தார். ஆனால் அன்று இரவு வெகுநேரமாகியும் அந்த பெண் வீடு திரும்பவில்லை, இதனால் அவரது குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து காவல் நிலைத்தில் புகார் கொடுத்தனர்.

மேலும், அசோக்குமார் என்பவர் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக அவர்கள் கூறினர். அதனையடுத்து போலீசார் அசோக் குமாரை பிடித்து விசாரணை செய்ததில் அந்தப் பெண்ணை அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கும் அந்த பெண்ணுக்கும் கள்ள உறவு இருந்து வரும் நிலையில், அந்தப் பெண் புதிதாக வேறு அணுடன் நெருக்கமாக இருந்ததால் ஆத்திரத்தில் அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்றதாக அசோக்குமார் வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில் அசோக்குமார் கொடுத்த தகவலின் பேரில், ஷாமிர் பேட்டை மண்டலத்திலுள்ள சவால்காடிமால் பேட்டை வனப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் 2 கள்ளக்காதல்கள் உடன் தொடர்பில் இருந்தவந்த பெண்  அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!