தனிமையில் வாடிய மாமனார்.. இளமையில் துடித்த மருமகள்.. அடிக்கடி தனிமையில் உல்லாசம்.. தடையாக இருந்த கணவன் கொலை.

Published : Aug 04, 2021, 04:28 PM ISTUpdated : Aug 04, 2021, 06:07 PM IST
தனிமையில் வாடிய மாமனார்.. இளமையில் துடித்த மருமகள்.. அடிக்கடி தனிமையில் உல்லாசம்.. தடையாக இருந்த கணவன் கொலை.

சுருக்கம்

இந்நிலையில் தனிமையில் வாடிய மாமனார் கருணையாவுக்கும் இளமையில் துடித்த மருமகள் சுனிதாவுக்கு மிடையே  ஈர்ப்பு ஏற்பட்டு பின் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. 

மாமனாருடன் ஏற்பட்ட கள்ள உறவுக்கு தடையாக இருந்த கணவனை மனைவி அடித்து கொலை செய்யதுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமனாரும் மருகளும் இணைந்து இந்த கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இது ஆந்திர மாநிலத்தில் மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர், அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது எனக் கூறுவதுண்டு, ஆனால்,ஒரு முறையற்ற நடத்தை, தன்னை வாழ்க்கைத் துணையை ஒரேயடியாக சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கும் அளவிற்கு கொடூரம் நிறைந்ததாக மாறிவிடுகிறது என்பதுதான் வேதனை. அப்படியாக ஒரு கொடூர சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், சாந்தமங்களூரு மண்டலத்தில் எல்கூர் பகுதியை சேர்ந்தவர் கருணையா- மாரியம்மாள் தம்பதியினர். இவர்களின் ஒரே மகன் லட்சுமையா (வயது 35) இவருக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு குண்டூர் மாவட்டம் பெனுகொண்டாவைச் சேர்ந்த சுனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. 

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணம் நடந்த கையோடு சுனிதாவின் மாமியார் மாரியம்மா இறந்துவிட்டார். இதனால் மாமனார் கருணையா தனிமையில் இருந்து வந்தார். இதற்கிடையில் கணவர் லட்சுமையா தினந்தோறும் குடித்துவிட்டு போதையில் வீட்டுக்குள் வந்து உறங்கி விடுவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தனிமையில் வாடிய மாமனார் கருணையாவுக்கும் இளமையில் துடித்த மருமகள் சுனிதாவுக்கு மிடையே  ஈர்ப்பு ஏற்பட்டு பின் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கையில் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இது ஒரு கட்டத்தில் மகன் லட்சுமையாவுக்கு தெரிந்தது.  மனைவியும்- தந்தையையும் அவர் கண்டித்துள்ளார். ஆனாலும்  அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை, கணவன் இருப்பதால் மாமனாருடனான உல்லாசம் தடை படுகிறது என எண்ணிய  சுனிதா. மாமனார் கருணையாவுடன் சேர்ந்து கணவன் லட்சுமையாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். 

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், வேலைக்கு சென்று குடித்துவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் லட்சுமையா, அப்போது தந்தையும் மனைவியும் சேர்ந்து பயங்கர ஆயுதங்களால் லட்சுமையாவை சரமரியாக தாக்கி படுகொலை செய்தனர்.  தந்தை அடித்து கொலை செய்யப்படுவதை லட்சுமையாவின் மூத்தமகன் பார்த்துவிட்டான். அதை அடுத்து அந்த சிறுவன் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். தாயும், தாத்தாவும் சேர்ந்து தந்தையைக் அடித்து கொன்றதை அச்சிறுவன் கூறினான். உடனே அங்கிருந்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிரேதத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். கணவனைக் கொலை செய்த குற்றத்திற்காக மனைவி சுமிதா வையம், மாமனார் கருணையாவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மருகளுடன் ஏற்பட்ட தவறான உறவால் சொந்த மகனையே தந்தை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!