திருமணத்திற்கு மறுத்த கள்ளக்காதலியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற பேன்சி ஸ்டோர் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருமணத்திற்கு மறுத்த கள்ளக்காதலியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற பேன்சி ஸ்டோர் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 11ம் தேதி 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடலில் காயங்களுடன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர், லால்குடி அடுத்த புள்ளம்பாடி முருவத்தூரை சேர்ந்த செல்வி என்பதும், 7 மாதங்களுக்கு முன்பு அவர் கணவர் இறந்து விட்டதும், தனது 3 குழந்தைகளுடன் அவர் வசித்து வந்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க;- ஃபர்ஸ்ட் நைட் முடிந்த மறுநாளே இளம்பெண் செய்த காரியம்.. 15 லட்சத்தை இழந்த புதுமாப்பிள்ளை கதறல்.!
செல்வி பயன்படுத்திய செல்போன் எண்ணை கொண்டு போலீசார் விசாரணையை துவக்கினர். அதில், லால்குடி அடுத்த கல்லக்குடியை சேர்ந்த பேன்சி ஸ்டோர் உரிமையாளர் நாகராஜ்(53) என்பவர் அடிக்கடி பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து செல்போன் டவர் சிக்னலை வைத்து நாகராஜை பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்;- நாகராஜின் மனைவி ஏற்கனவே இறந்து விட்டதால் செல்வியிடம் கள்ளத்தொடர்பில் நாகராஜ் இருந்து வந்தார். செல்வியின் கணவர் இறந்து விட்டதால் தன்னை திருமணம் செய்து கொள்ள நாகராஜ் வற்புறுத்தி வந்தார். இதற்கு செல்வி மறுத்ததோடு அவரிடமிருந்து விலகியிருக்க முடிவு செய்தார். இதுதொடர்பாக பேசுவதற்காக சம்பவத்தன்று போன் செய்து நாகராஜ், செல்வியை கொள்ளிடம் ஆற்று பகுதிக்கு வரவழைத்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதையும் படிங்க;- லாட்ஜில் ரூம் போட்டு படுக்கை அறையில் பெண் நிர்வாகியுடன் பாஜக தலைவர் உல்லாசம்? வீடியோ வைரல்..!
பின்னர் இருவரும் கொள்ளிடம் ஆற்றின் மணல் பகுதியில் பேசி கொண்டிருந்தனர். பின்னர் கலைச்செல்வி அவரிடம் இனிமேல் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் இரும்பு கம்பியால் அவரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து நாகராஜை கைது செய்தோம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- ஒரு பேராசிரியைக்கு இவ்வளவு ஒரு காமவெறியா? கள்ளக்காதலை துண்டித்த காதலன்.. 40 இடங்களில் கத்தியால் குத்தி கொலை