
பேராண்பட்டு அருகே மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை கொடூரமாக வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேராண்பட்டு அடுத்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டில்லிபாபு(50). கட்டிட மேஸ்திரி இவரது மனைவி லட்சுமி(45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் தம்பதி இருவரும் பிரிந்து அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி(55). பேரணாம்பட்டில் உள்ள தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த தம்பதி இடையேயும் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கோவிந்தசாமி தனியாக வசித்து வந்தார். இந்ந்லையில், கோவிந்தசாமி, லட்சுமிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி லட்சுமி வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இந்த விவகாரம் டில்லிபாபு தெரியவந்ததையடுத்து கோவிந்தசாமியிடம் நீ ஏன் என் மனைவி வீட்டிற்கு செல்வதை நிறுத்திக்கொள் எனக்கூறி வந்துள்ளார். இதனை கண்டுகொள்ளதாக கோவிந்தசாமி நேற்று லட்சுமி வீட்டிற்கு சென்று நீண்ட நேரம் இருந்து விட்டு இரவு 10 மணிக்கு வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த டில்லிபாபு தான் கொண்டு வந்த அரிவாளால் கோவிந்தசாமியை சரமாரியாக வெட்டியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்த டில்லிபாபு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த கோவிந்தசாமியை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோவிந்தசாமியின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள டில்லிபாபு இன்று ஆம்பூர் காவல் நிலையத்தில் சரணமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.