பெண்ணை உயிருடன் எரித்துக்கொன்ற கள்ளக்காதலன்... போலீசாரிடம் கூறிய பகீர் காரணம்..!

Published : Jun 23, 2021, 06:58 PM ISTUpdated : Jun 23, 2021, 07:01 PM IST
பெண்ணை உயிருடன் எரித்துக்கொன்ற கள்ளக்காதலன்... போலீசாரிடம் கூறிய பகீர் காரணம்..!

சுருக்கம்

ஒரு செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனை வைத்து போலீசார் விசாரணை செய்த போது கொலையுண்ட பெண் மதுரவாயலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமான துப்புரவு தொழிலாளி ரேவதி என்பது தெரிந்தது. அவரது உடலை கணவர் முருகன் அடையாளம் காட்டினார்.

கை, காலை கட்டிப்போட்டு பெண் துப்புரவு தொழிலாளி எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை மதுரவாயல் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (36). இவர் வளசரவாக்கத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் துப்புரவு ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற ரேவதி பின்னர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. 

இது குறித்து முருகன் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரேவதியை தேடி வந்தனர். இதனிடையே நொளம்பூர் சர்வீஸ் சாலையை ஒட்டியுள்ள முட்புதரில் பெண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அப்போது உடல் கிடந்த இடம் அருகே வீசப்பட்ட சிறிய மணி பர்சில் இருந்த ஆதார் கார்டில் ரேவதி என்று இருந்தது. ஒரு செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனை வைத்து போலீசார் விசாரணை செய்த போது கொலையுண்ட பெண் மதுரவாயலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமான துப்புரவு தொழிலாளி ரேவதி என்பது தெரிந்தது. அவரது உடலை கணவர் முருகன் அடையாளம் காட்டினார்.

இதை தொடர்ந்து ரேவதியின் செல்போனில் இருந்த அழைப்புகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், ரேவதி வேலை பார்த்த வளசரவாக்க மண்டல அலுவலகத்தில் குப்பைகளை ஏற்றிச் செல்லும் பேட்டரி ஆட்டோவில் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் திம்மப்பா என்பவருடன் அடிக்கடி பேசி இருப்பது தெரிந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது கொலை சய்த ரேவதிக்கும், திம்மப்பாவுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது தெரிந்தது.

இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திம்மப்பா, ரேவதியிடம் 5 பவுன் நகையை கடனாக வாங்கி இருந்தார். பின்னர் அதனை அவர் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நொளம்பூர் சர்வீஸ் சாலைக்கு வருமாறு திம்மப்பா அழைத்துள்ளார். ரேவதி அங்கு வந்ததும் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த திம்மப்பா ரேவதியை கத்தியால் குத்திவிட்டு கை, கால்களை கட்டி எரித்து கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து திம்மப்பாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..