கொடுத்த காசை திருப்பிக் கேட்டால் ஆபாசப் படத்தை வெளியிடுவேன்..! அப்பாவி பெண்ணை மிரட்டும் பலே ஆசாமி..!

Published : May 17, 2019, 10:54 AM ISTUpdated : May 17, 2019, 11:00 AM IST
கொடுத்த காசை திருப்பிக் கேட்டால் ஆபாசப் படத்தை வெளியிடுவேன்..!  அப்பாவி பெண்ணை மிரட்டும் பலே ஆசாமி..!

சுருக்கம்

கொடைக்கானல் ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் எதிரே சசிகுமார் என்பவர் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார் அதே காம்ப்ளக்சில் உள்ள கவரிங் கடையில் அப்சர்வேட்டரியைச் சேர்ந்த மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் சில நாட்களில் பழக்கம் ஏற்பட்டது. இதை சாக்காக வைத்து மல்லிகாவிடம் சசிகுமார் கடன் வாங்கி இருந்தார். அந்த கடன் தொகையை பல முறை கேட்டு பார்த்தும் அவர் தரவில்லை.

“சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளாதே” என சொல்வார்கள் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. 

கொடைக்கானல் ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் எதிரே சசிகுமார் என்பவர் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார் அதே காம்ப்ளக்சில் உள்ள கவரிங் கடையில் அப்சர்வேட்டரியைச் சேர்ந்த மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வேலை பார்த்து வந்தார்.  இருவருக்கும் சில நாட்களில் பழக்கம் ஏற்பட்டது. இதை சாக்காக வைத்து மல்லிகாவிடம் சசிகுமார் கடன் வாங்கி இருந்தார். அந்த கடன் தொகையை பல முறை கேட்டு பார்த்தும் அவர் தரவில்லை.

சம்பவத்தன்று சசிகுமாரின் கடை அடைக்கப்பட்டு இருந்ததால் மல்லிகா அவருக்கு போன் செய்தார். அப்போது தான் பணம் தயார் செய்து விட்டதாகவும் வத்தலக்குண்டுவில் இருப்பதாகவும சசிகுமார் கூறியுள்ளார். மேலும் மல்லிகாவிடம் வத்தலக்குண்டுவுக்கு வந்தால் பணத்தை வாங்கிச் செல்லலாம் என கூறியுள்ளார். அதனை நம்பி போன மல்லிகாவை தனியார் லாட்ஜில் வைத்து அங்கு மிரட்டி கற்பழித்தார். 

அவருடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்துக் கொண்டார். இனிமேல் தன்னிடம் பணம் கேட்டால் இந்த படத்தை உனது கணவரிடமும், ஊரில் உள்ளவர்களிடமும் காட்டி விடுவதாக மிரட்டினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மல்லிகா கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த ஆபாச புகைப்படங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர்.

PREV
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!