போலீஸ் மிரட்டியதால் தீ குளித்தேன்.! போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.!

Published : Aug 03, 2020, 07:44 AM IST
போலீஸ் மிரட்டியதால் தீ குளித்தேன்.! போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.!

சுருக்கம்

திருவள்ளூரில் வாடகை பிரச்சினையில் தீக்குளித்தவர் போலீசார் மிரட்டியதால் தான் நான் இப்படி செய்தேன் என வாக்குமூலம் அளித்ததால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  


திருவள்ளூரில் வாடகை பிரச்சினையில் தீக்குளித்தவர் போலீசார் மிரட்டியதால் தான் நான் இப்படி செய்தேன் என வாக்குமூலம் அளித்ததால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம். புழல் பகுதியில் பாலவிநாயகர் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சீனிவாசன். இவருக்கும் வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன் என்பவருக்கும் வாடகை விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜேந்திரன் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை விசாரிக்க வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்... சீனிவாசனிடம் மிரட்டும் போக்கில் நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த சீனிவாசன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 88 சதவீதம் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள சீனிவாசன் தான் தீக்குளிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் நடவடிக்கையே காரணம் என வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது..இதையடுத்து சீனிவாசனை விசாரிக்க சென்ற புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
எத்தனை சாத்தான்குளம் சம்பவம் நடந்தாலும் போலீஸ் அதிகாரிகள் திருந்தப்போவதில்லை..!
 

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்