பயங்கரம்.. காட்டுப்பதிக்கு தூக்கிச் சென்று கல்லூரி மாணவி கதற கதற கூட்டு பலாத்காரம்.. ICUவில் சிகிச்சை..!

Published : Feb 12, 2021, 11:32 AM IST
பயங்கரம்.. காட்டுப்பதிக்கு தூக்கிச் சென்று கல்லூரி மாணவி கதற கதற கூட்டு பலாத்காரம்.. ICUவில் சிகிச்சை..!

சுருக்கம்

ஐதராபாத்தில் கல்லூரி மாணவியை கடத்தி கொடூரமாக தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கில்  ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐதராபாத்தில் கல்லூரி மாணவியை கடத்தி கொடூரமாக தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கில்  ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் பெண் மருத்துவர் 4  பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்து உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், கைது செய்யப்பட்ட 4 பேரும் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.இந்நிலையில், ஐதராபாத்தில் மீண்டும் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஐதராபாத் அருகே கீசேரா பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பகுதி நேரமாக ஒரு மருந்தகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டுக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறினார். அப்போது அந்த ஷேர் ஆட்டோவில் மேலும் 2 பயணிகள் இருந்தனர். அவர்கள் வழியில் இறங்கி சென்றுவிட்டார்கள். பின்னர் கல்லூரி மாணவி இறங்க வேண்டிய இடத்தில் ஆட்டோவை நிறுத்தாமல் ஓட்டுநர் வேகமாக ஓட்டிச் சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி, கூச்சல் போட்டார். ஆனால் ஆட்டோவை நிறுத்தாமல் ஓட்டுநர் ஓட்டி சென்றதால் உடனே மாணவி தனது தாய்க்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் கல்லூரி மாணவியின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். அப்போது மெச்சால் காடிகேசர் என்ற பகுதியில் இருந்து தனது தாய்க்கு செல்போனில் தகவல் தெரிவித்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த பகுதி முழுவதிலும் போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தினார்கள். மாணவியின் செல்போன் சிக்னல், ஊருக்கு ஒதுக்குப்புறமான அன்னோஜி கூடா என்ற பகுதியில் இருப்பதாக காட்டியது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் பார்த்த போது கல்லூரி மாணவி மயங்கிய நிலையில் கீழே கிடந்தார். உடனே அவரை மீட்ட போலீசார்  காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாணவிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. 

விசாரணையில் அவரை ஆட்டோ டிரைவரும், அவரது நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது தெரியவந்தது. மேலும் அவரை அடித்து துன்புறுத்தியும் உள்ளனர். இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

தாய் தந்தையைக் கொன்று ரம்பத்தால் துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மகன்!
பேருந்தில் இவ்வளவு பேர் இருக்கும் போதே ஸ்ரீதர் செய்த வேலை.. கண்ட இடத்தில் கை வைத்ததால் பதறிய பள்ளி மாணவி