ஃபேஸ்புக் நேரலையில் மனைவியின் முனகல் சத்ததுடன் வீடியோ வெளியிட்ட கணவன்... துடிதுடிக்க வைத்த கள்ளக்காதல்..!

Published : Apr 16, 2020, 03:50 PM ISTUpdated : Apr 16, 2020, 03:51 PM IST
ஃபேஸ்புக் நேரலையில் மனைவியின் முனகல் சத்ததுடன் வீடியோ வெளியிட்ட கணவன்... துடிதுடிக்க வைத்த கள்ளக்காதல்..!

சுருக்கம்

ஐந்தாண்டுகளாக விழுந்து விழுந்து காதலித்து அதே பெண்ணை திருமணம் செய்த கணவனே கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஐந்தாண்டுகளாக விழுந்து விழுந்து காதலித்து அதே பெண்ணை திருமணம் செய்த கணவனே கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேஷ், பராகிப்பூர் அடுத்த பெனி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் புகியான். இவருடைய மனைவி தகிமா அக்தர். இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்தது திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 8 வயதில் மகளும் இருக்கிறார். மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்வில் திடீரென புயல் வீச தொடங்கியது. கணவன் மனைவிக்குள் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் நீண்டன.

இந்நிலையில் நேற்று பேஸ்புக் லைவ் வந்த புகியான், ஒரு நபரால் தனது மொத்த குடும்பத்தின் சந்தோஷமும் போய்விட்டதாக கூறினார். அந்த ஒரு நபர் தனது குடும்பத்தையே அழித்து விட்டதாகக் கூறி, கீழே மயங்கிய நிலையில் கிடந்த மனைவியை, கொடூரமாக இரும்பு கம்பியால் தாக்கினார். எதார்த்தமாக முகநூல் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த அவரது நண்பர்கள், அந்த கொடூரத்தைப் பார்த்து உறைந்து போயினர். புகியான் மனைவியைத் தாக்கும் போது மயங்கிய நிலையில் கிடந்த அவரின் முனங்கல் சத்தம் மட்டும் கேட்டது.

இதையடுத்து தனது 8 வயது குழந்தையுடன் மற்றொரு வீடியோவை பதிவிட்ட அவர், ''எனது மனைவி தன்னையும், தனது குழந்தையையும் தவிக்க விட்டுச் சென்று விட்டார். சில காலம் கழித்து மீண்டும் என்னுடன் வந்து சேர்ந்து கொண்டார். ஆனால், அன்றிலிருந்து நான் எப்போது வேண்டுமானாலும் சென்று விடுவேன் என என்னை மிரட்டிக் கொண்டே இருந்தார். அந்த கொடுமையை என்னால் சமாளிக்கவே முடியவில்லை. இந்த கொலைக்கு நான் மட்டும் தான் காரணம். இப்போது என்னுடைய குழந்தையும் அனாதையாகப் போகிறது'' என உருக்கத்துடன் கூறினார்.

இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் புகியானை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கொலைக்கான காரணம் குறித்து புகியான், ''தான் டாக்காவில் வேலை செய்து கொண்டிருந்த போது, தன்னுடைய மனைவிக்கும் மற்றொரு நபருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதனால், எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

அந்த நபருடனான உறவைத் துண்டிக்குமாறு எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை. அந்த சித்திரவதையை என்னால் தங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் மனைவியைக் கொலை செய்தேன் எனக் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி