
விருதுநகர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை எரித்து கொன்ற கணவர் மற்றும் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே குல்லூர் சந்தையை சேர்ந்தவர் நாகமுத்து(33). கொத்தனால் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நிர்மலாதேவி (31). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நாகமுத்துவிற்கும், அவருடன் சித்தாள் வேலைபார்க்கும் முனீஸ்வரி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதனால், நாகமுத்து, நிர்மலாதேவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நாகமுத்து தனது குழந்தைகளை சென்று வரலொட்டியில் உள்ள மாமியார் வீட்டில் விட்டு வந்துள்ளார்.மீண்டும் நாகமுத்து நிர்மலாதேவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நாகமுத்து கீழே கிடந்த விறகு கட்டையை எடுத்து மனைவியின் தலையில் தாக்கினார். இதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுதொடர்பாக கள்ளக்காதலி முனீஸ்வரியிடம் நாகமுத்து தெரிவித்துள்ளார். முனீஸ்வரி கள்ளக்காதலன் நாகமுத்து வீட்டிற்கு வந்துள்ளார். வீடு ஒதுக்குப்புறம் என்பதால் இரவோடு இரவாக நாகமுத்து முனீஸ்வரி சேர்ந்து நிர்மலாதேவியின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். மறுநாள் காலை எரிக்கப்பட்ட இடத்தில் எலும்பு சாம்பலை உள்ளிட்டவைகளை சேகரித்து அணையில் நாகமுத்து கரைத்துள்ளனர். இது தொடரப்பாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் ரகசிய தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, நாகமுத்து, முனீஸ்வரியையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.