கறி குழம்பில் உப்பு இல்லை என்று கேட்ட கணவன்.. இரும்பு கம்பியால் மண்டையை டாராக்கிய டெரர் மனைவி.

By Ezhilarasan BabuFirst Published Sep 8, 2021, 3:54 PM IST
Highlights

ஹரியானா மாநிலத்தின் ஹிசார்  மாவட்டத்தில் பர்வாலா கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்(40) இவர் அதே பகுதியில் ஆயுர்வேத மருத்துவராக பணியாற்றி வருகிறார். 

கறி குழம்பில் உப்பு இல்லை எனக்கேட்ட கணவனின் மண்டையை மனைவி அடித்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலையில் அடிபட்ட கணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம், ஆனால் அந்த கருத்து வேறுபாடு வாக்குவாதமாக மாறி அது கைகலப்பாக மாறும்பட்டசத்தில் அது சில விரும்பத்தகாத  சம்பவங்களை நிகழ்த்தி விடுவது உண்டு. அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் கணவன் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் வகையில் மனைவி கொடூரமாக தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஹரியானா மாநிலத்தின் ஹிசார்  மாவட்டத்தில் பர்வாலா கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்(40) இவர் அதே பகுதியில் ஆயுர்வேத மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவருக்குப் பிந்தியா என்ற பெண்ணுடன் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது.  மனைவி பிந்தியா சற்று மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவின் போது பிந்தியா தன் தாயார் சமைத்த கறியை கணவர் தினேஷுக்கு வழங்கினார். ஆனால் அந்த கறி குழம்பில் உப்பு குறைவாக இருந்ததாக தெரிகிறது. மேலும் அது ருசியாக இல்லை என கூறிய தினேஷ் அதை சாப்பிட மறுத்து, மனைவி பிந்தியாவை திட்டினார். கணவன் கறி சுவையாக இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த மனைவி பிந்தியா, அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து கணவர் தினேஷின் தலையில் பலமாக அடித்தார். 

இதனால் தினேஷ் ஆ என அலறி கீழே சரிந்தார் தினேஷ், அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர், தினேஷ் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தான் தாக்கப்பட்டது குறித்து தினேஷ் தனது மனைவியின் மீது போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் மனைவி பிந்தியா சரியான மனநிலையில் இல்லாதவர் என்பதால் அவருக்கு தண்டனை வழக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
 

click me!