ஒரே நேரத்தில் இரண்டு கள்ளக்காதலி... சினிமா மிஞ்சும் வகையில் சிறுவன் கொலை.. வெளியான பகீர் தகவல்..!

Published : Sep 07, 2021, 03:32 PM IST
ஒரே நேரத்தில் இரண்டு கள்ளக்காதலி... சினிமா மிஞ்சும் வகையில் சிறுவன் கொலை.. வெளியான பகீர் தகவல்..!

சுருக்கம்

எனக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிந்து என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நதியாவுடனும், சிந்துவுடனும் நான் உல்லாசமாக இருந்து வந்தேன். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி  சிறுவன் ராகுலை நான் அடித்த போது, வலி தாங்க முடியாமல் அவன் உயிரிழந்து விட்டான்.

கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை அடித்து  சித்திரவதை செய்து கொலை செய்து, உடலை மலை அடிவாரத்தில் வீசிச்சென்ற வழக்கில், தாய், கள்ளகாதலன், கள்ளக்காதலனின் மற்றொரு கள்ளக்காதலி உள்பட 3  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கொட்டிலேட்டி கிராமத்தில் இருந்து உச்சன்கொல்லைக்கு செல்லும் வழியில், மல்லேஸ்வரன் மலை அடிவாரத்தில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தான். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்ட சிறுவன் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், பெங்களூரு பி.டி.எம். லேஅவுட் பகுதியில் வசிக்கும் தனலட்சுமி, பெங்களூரு மைக்கோ லேஅவுட் போலீஸ் ஸ்டேசனில், கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி, தனது மகள் நதியாவின் மகன் ராகுல்(10) என்பவனை கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணவில்லை என்று புகார் அளித்திருந்தார். அவர் புகார் மனுவுடன் அளித்த புகைப்படத்தை போலீசார் சரிபார்த்த போது, பர்கூரில் கொலையாகி கிடந்த சிறுவன் ராகுல் தான் என்பதை உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனை கொலை செய்தது அவரது தாய் நதியா, கள்ளக்காதலன் சுனில்குமார்(30), அவரது மற்றொரு கள்ளக்காதலி சிந்து(25) ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சுனில்குமார் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;- நதியாவின் மகன் ராகுல் 3 மாத குழந்தையாக இருந்த போது நதியாவின் கணவன் ரவி பிரிந்து சென்றுவிட்டார். இதன் பிறகு எனக்கும், நதியாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருப்போம். ராகுல் குழந்தையாக இருந்த வரை, எந்த பிரச்னையும் இல்லாமல் நாங்கள் உல்லாசமாக இருந்து வந்தோம்.

அவன் வளர, வளர எங்களுக்கு இடையூறாக இருந்தான். இதனால் நானும், நதியாவும் அவனை அடிக்கடி பிரம்பால் அடிப்போம். மேலும் சூடு வைப்போம். இதற்கிடையே எனக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிந்து என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நதியாவுடனும், சிந்துவுடனும் நான் உல்லாசமாக இருந்து வந்தேன். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி  சிறுவன் ராகுலை நான் அடித்த போது, வலி தாங்க முடியாமல் அவன் உயிரிழந்து விட்டான். பின்னர், ஒரு காரில் அவனது சடலத்தை எடுத்து வந்து கொட்டிலேட்டி சென்று, அங்குள்ள மலையடிவாரத்தில் உடலை போட்டு விட்டு, யாருக்கும் தெரியாமல் வந்து விட்டோம்.

இந்த விவரத்தை பின்னர் நதியாவிடம் கூறினோம். சிறுவன் காணாமல் போனது முதல், அவனது பாட்டி தனலட்சுமி, பெரியம்மா ஷோபா ஆகியோர் எங்களிடம் அடிக்கடி கேட்டு வந்தனர். நாங்கள் அவன் வெளியூரில் விடுதியில் தங்கி படிக்கிறான் என்று கூறினோம். 6 மாதங்களுக்கும் மேலாக அவன் வராததாலும், தன்னிடம் பேசாததாலும், சந்தேகமடைந்த அவனது பாட்டி, போலீசில் புகார் செய்தார். அதில் நாங்கள் மாட்டிக் கொண்டோம் என தெரிவித்தார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுவனை அவனது தாய், கள்ளக்காதலன் மற்றும் மற்றொரு கள்ளக்காதலி உதவியுடன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி