கணவன் கண்முன்னே.. மனைவியை சீரழித்த 'வெறி' பிடித்த கும்பல்.. காம கொடூரர்களை சிக்க வைத்த சிசிடிவி !!

Published : Mar 27, 2022, 12:46 PM IST
கணவன் கண்முன்னே.. மனைவியை சீரழித்த 'வெறி' பிடித்த கும்பல்.. காம கொடூரர்களை சிக்க வைத்த சிசிடிவி !!

சுருக்கம்

கணவரை மரத்தில் கட்டிவைத்துவிட்டு, அவர் கண்முன்னே மனைவியை பலவந்தமாக மிரட்டி 10 பேர் கொண்ட கும்பல் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

பாலியல் கொடுமை செய்த கும்பல் :

உத்தரப்பிரதேசம் மாநிலம், நை மண்டி கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மாலையில் தனது கணவருடன் மாமியார் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். இரவு 7 மணியளவில், போபா புறவழிச்சாலைக்கு அருகில் இருந்தபோது, ​​பின்னால் இருந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த பத்து பேர் கொண்ட கும்பல், அவர்களைச் சுற்றி வளைத்தனர். 

அந்த பெண்ணையும், அவரது கணவரையும் கடத்திச் சென்ற மர்மநபர்கள், அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.  பெண்ணின் கணவரை மரத்தில் சங்கிலியால் கட்டிப்போட்டு விட்டனர். அவர் கண்முன்னே மனைவியை பலவந்தமாக மிரட்டி 4 பேர் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் அந்தப்பெண் மயக்கமடைந்த நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.

பின்னர் அங்கிருந்து தப்பித்த கணவர் தனது மனைவியை அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதனையடுத்து திஷா சாலியன் அளித்த புகாரின் பேரில், நியூ மண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 சிறார்கள் உட்பட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவியில் சிக்கிய குற்றவாளிகள் :

இதுகுறித்து பேசிய போலீசார், ‘மகியாலி கிராமத்தைச் சேர்ந்த ஆஷு, இர்ஷாத், ஜாவேத், ஷாருக் மற்றும் மதீனா காலனியைச் சேர்ந்த உஸ்மான், அபித், ஷாவேஸ், ஷதாப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறார் மறுவாழ்வுக்கு அனுப்பப்பட்ட இளம் பருவத்தினர் ஆவார்கள். மற்ற எட்டு பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கணவரை சித்திரவதை செய்த மர்ம நபர்கள், போலீசில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்டவரின் மனைவி ஒரு டிரக் டிரைவர். கும்பல் பலாத்கார குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் அனைவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அனைவரும் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகள் அனைவரும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்’ என்றும் கூறினர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!